சென்னை, ஜூன் 12 சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (11.6.2023) காலை 9.30 மணி அளவில் திருவள்ளூர் நோக்கி மின்சார ரயில் புறப்பட்டு சென்றது. 9 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் பேசின் பிரிட்ஜ் அருகே சென்றபோது திடீரென அந்த ரயிலின் 8-ஆவது பெட்டி தடம் புரண்டு கீழே இறங்கியது. ரயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதும், பெட்டி பலத்த சத்தத்துடன் குலுங்கியது. இத னால், பயணிகள் பதற்றம் அடைந்து கூச்சலிட்டனர். இதை யடுத்து, என்ஜின் ஓட்டுநர் சுதா கரித்துக்கொண்டு உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர், தடம் புரண்ட பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினர். அப்போது, பெட் டியின் வலது பக்க பகுதி தண்ட வாளத்தை விட்டு கீழே இறங்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து, ரயில் ஓட்டுநர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனே ரயில்வே அதி காரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடம் புரண்ட ரயில் பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மின்சார ரயில்கள் சிறிது நேரம் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டன. ரயில் பெட்டியை சரிசெய்யும் பணியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், ஆவடி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். சம்பவ இடத்தை சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தரம் புரண்ட ரயிலை மதியம் 12.15 மணி அளவில் ஊழியர்கள் சரிசெய்து அண்ணனூர் பணிமனைக்கு கொண்டு சென்றனர். வழக்கமாக இந்த ரயிலில் காலை நேரத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதி காணப்படும். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் இந்த ரயிலில் 250 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து, ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 8-ஆம் தேதி நள்ளிரவு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்டிரல் ரயில் நிலை யம் வந்த ஜன் சதாப்தி எக்ஸ் பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு பேசின்ட் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரன தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் பயணிகள் இல் லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடந்த வாரத்தில் மட்டும் பேசின் பிரிட்ஜ் அருகே ரயில்கள் தடம் புரளும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பவத்திற்கு பின்னர் அனைத்து ரயில் நிலையங்களில் சிக்னல்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் தண்டவாளங்களை சரியாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து மண்டல பொது மேலா ளர்களுக்கும் இந்திய ரயில்வே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலை யில், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.