ஜெயங்கொண்டம், ஜூலை 31- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி வி. விஜயலாவண்யா 198/200 தரவரிசை அடிப்படையில் Electrical and Electronic Engineering (EEE) பாடப்பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார்
இரண்டாம் இடம் பிடித்த மாணவி ஜி லாவண்யா 195.5/200 தரவரிசை அடிப்படையில் Bsc(Hons)Agricultural பாடப்பிரிவில் ADAC&RI கல்லூரி திருச்சியில் சேர்ந்துள்ளார்
மூன்றாம் இடம் பிடித்த மாணவன் கே.அமுதன்193.5/200 தரவரிசை அடிப்படையில் Information Technology (IT) பாடப்பிரிவில் அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரி காரைக்குடியில் சேர்ந்துள்ளார்.
தரவரிசை அடிப்படையில் அரசுக் கல்லூரிகளில் இடம் பிடித்த மாணவர்களைப் பள்ளியின் தாளாளர்,முதல்வர், இருபால் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.