தருமபுரி, ஜூலை 31- தருமபுரி மாவட்டம் கீரைப்பட்டியை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில சட்டதிட்ட குழு உறுப்பினரும், திமுக தலைமை கழக சொற்பொழிவாளரும், மாவட்ட பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் கவிஞர் கீரை. பிரபாகரனின் சகோதரரும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் மீது கொள்கைப் பற்று கொண்டவருமான கீரைப்பட்டி எம்.எஸ்.விஸ்வநாதன் (வயது 75) 28.7.2025ஆம் தேதி உடல் நலக்குறைவால் மறைவுற்றார்.
அவரது உடல் சொந்த ஊரான கீரைப்பட்டி இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில், மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, மாவட்ட பகுத்தறிவாளக் கழக தலைவர்
சா.இராஜேந்திரன், மாவட்ட கழக துணை செயலாளர் வழக்குரைஞர் வடிவேலன், மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் பாவலர் பெரு.முல்லையரசு முன்னிலையில் கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் மறைந்த எம்.எஸ்.விஸ்வ நாதன் உடலுக்கு மாலை வைத்து வீரவணக்கம் முழக்கமிட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர், மேனாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் திமுக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக மகளிர் அணி பொறுப்பாளர்கள் மணி மேகலை, கல்பனா உம்மா வேளாங்கண்ணி, பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் பாளையம் பசுபதி, கவிஞர் பிரேம்குமார், என்.டி.குமரேசன், சிந்தை பச்சையப்பன், திமுக நிர்வாகிகள் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சின்னசாமி, ஆர்.வேடம்மாள், அரூர் பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி, காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன், அரூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சூரிய தனபால், அரூர் திமுக நகர செயலாளர் முல்லை ரவி, பாப்பிரெட்டிப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர் பி. எஸ். சரவணன், திமுக சொற்பொழிவாளர் தமிழ்ச் செல்வன், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான திமுக தோழர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.