இணைய தகவல் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் பெண்களே

2 Min Read

பணம், சொத்துக்கள், தனிப்பட்ட தகவல்கள் போன்றவற்றை ஒருவருடைய அனுமதி இல்லா மலேயே ஏமாற்றி பறிக்கும் செயல்கள் நம்மைச் சுற்றி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் அகப்பட்டுக்கொள்ளலாமல் பாதுகாப் பாக இருப்பதற்கான சில வழிகளை பார்க்கலாம்.

நாம் பயன்படுத்தும் கணினி, அலைபேசி உள்ளிட்டவற்றை தகுந்த பாதுகாப்பு சாப்ட்வேர் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும். இவற்றில் தனிப்பட்ட எந்த தகவலையும் பதியாமல் இருக்க வேண்டும். குறிப்பாக நிதி சார்ந்த எந்த தகவ லையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகை யில் பதியாமல் இருக்க வேண்டும்.

வங்கிக்கு நேரடியாக சென்று பணப்பரிவர்த் தனை மேற்கொள்வதற்கு பதிலாக இணையத் தளம், அலைபேசி செயலி போன்ற பல தொழில் நுட்பங்கள் நடைமுறையில் உள்ளன. இவற்றால் எந்த அளவுக்கு பணி எளிமையாகியுள்ளதோ, அதே அளவுக்கு ஏமாற்றும் முறைகளும் அதி கரித்துள்ளன. செயலியை பயன்படுத்துபவர்கள் தினமும் ஒருமுறையாவது தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள இருப்பு பிற பரிவர்த்தனைகள் குறித்து கவனிக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை குறித்த எச்சரிக்கை குறிப்புகளை அனுப்புமாறு வங்கிக்கு கோரிக்கை விடுப்பது நமக்கு பாது காப்பை ஏற்படுத்தும்.

இ-மெயிலில் பல பரிவர்த்தனைகள் ஏமாற்று பேர்வழிகள் மூலம் கவர்ச்சிகரமான வாசகங்களு டன் வருகின்றன. இவற்றை திறந்து பார்க்கும் போது நம் ரகசிய தகவல்கள் அனைத்தும் எளிதில் திருடப்படும் வாய்ப்புள்ளது. எனவே எதையும் ஒருமுறைக்கு இருமுறை படித்து நம்பகமானது என்று உறுதி செய்த பின்புதான் உள் நுழையவும். அறிமுக இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது எளிதில் நம் தகவல்களை திருட வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே வரும் அழைப்புகள் நம்பகமானதா?என்பதை கவனத்தில் கொண்டு பாதுகாப்பனது என்று உறுதி செய்யும் அழைப்பு களுக்கு மட்டும் பதிலளித்தால் போதுமானது. நம்பகமில்லை என்பது தெரிந்தால் உடனடியாக அந்த அழைப்பை துண்டித்து விடுவது நல்லது.

நமக்குத் தெரியாமல் நம்மிடம் இருந்து திரு டும் தகவலை கொண்டு யார் வேண்டுமானாலும் நம் கணக்கை இயக்க முடியும். இது போல் நம கணக்கை பிறர் இயக்குவது குறித்து தெரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அமைப்பை தொடர்பு கொண்டு அந்த கணக்கை முடக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண் டும். மின்னணு சார்ந்த பணப்பரிவர்த்தனையை பலரும் பயன்படுததுகின்றனர். இதில் நீங்கள் பதிவு செய்யும் கடவுச்சொல் உங்களுக்கு மட்டும் தெரிந்ததாக இருக்க வேண்டும். கூட்டம் அதிக முள்ள பகுதியில் கடவுச்சொல்லை பயன்படுத்து வதாக இருந்தால் அந்த கடவுச்சொல்லை உட னடியாக மாற்றி புதிய கடவுச்சொல்லை பதிவு செய்து கொள்ளலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நாம் வியந்து பார்க்கும் வகையில் பலஏமாற்று வேலைகள் நம்மை சுற்றி அரங்கேறுகின்றன. இதில் மற்றவர் களை குறைகூறுவதை விட நாம் விழிப்பு ணர்வுடன் இருந்தாலே மோசடிப் பேர்வழி களிடம் இருந்து காத்து கொள்ளலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *