தஞ்சையில் நடைபெறும் பெரியார் சமூககாப்பு அணி பயிற்சிக்கு அதிக இளைஞர்களை அனுப்பி வைக்க முடிவு!
மன்னை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடலில் தீர்மானம் தஞ்சையில் நடைபெறும் பெரியார் சமூககாப்பு அணி பயிற்சிக்கு அதிக இளைஞர்களை அனுப்பி வைக்க முடிவு!
மன்னார்குடி, ஜூலை 31 கடந்த 27.7.2025 அன்று மாலை 6 மணி அளவில் மன்னார்குடி பெரியார் படிப்பகத்தில் பொறுப்பாளர்கள் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.அன்பழகன் தலைமை ஏற்று மாநாட்டு வரவு– செலவு கணக்கை வாசித்தார். மாவட்டத் தலைவர்
ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் அனைவரையும் வரவேற்று நன்றி கூறினார்.
உழைத்த அனைவருக்கும் பாராட்டு!
குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டாலும், ஜூலை 6 ஆம் தேதி நடைபெற்ற மன்னார்குடி நகரத்தில் நடைபெற்ற ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு திறந்த வெளிமாநாட்டினையும், ‘கொள்கை வீராங்கனைகள்’ நூல் வெளியீட்டு விழாவினையும் சிறப்பாக நடத்திட உழைத்திட்ட அனைவரையும் பாராட்டுவதுடன், நன்கொடைகளை சிறப்புடன் திரட்டி வழங்கியமைக்கும், பொறுப்பாளர்கள் தானே அதிக நிதி வழங்கிச் சிறப்பித்தமைக்கும் பாராட்டி நன்றி கூறினார். அனைத்துப் பொறுப்பாளர்களுக்கும் கருப்புச் சட்டையினை பயனாடையாக வழங்கிப் பாராட்டினார். மாநாட்டினை சிறப்பாக ஒருங்கிணைத்தமைக்கு அனைத்துப் பொறுப்பாளர்களும் மாவட்டத் தலைவருக்கு சிறப்பு செய்தனர்.
பங்கேற்றோர்
கூட்டத்தில் ப.க. மாவட்டத்தலைவர். வை.கவுதமன், நகர இளைஞரணி தலைவர் மா.மணிகண்டன், ப.க. தோழர் ச.அறிவானந்தம், கோட்டூர் ஒன்றிய ப.க.செயலர் கா.சுருளிராஜன், ப.க. மாவட்ட அமைப்பாளர்
இரா.கோபால், மன்னார்குடி ஜெ.சம்பத், கோட்டூர் ஒன்றிய ப.க.தலைவர் சிறுகளத்தூர் சு.ராமலிங்கம், மாவட்ட இளைஞரணிச்செயலாளர் க.இளங்கோவன், கோட்டூர் ஒன்றி யச் செயலாளர் எம்.பி.குமார், ப.க. மன்னை நகரத் தலைவர் கோவி.அழகிரி, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் செய லாளர் தங்க.வீரமணி, மாவட்டத் துணைத்தலைவர் நா.இன்பக்கடல், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் சதா.அய்யப்பன், ப.க. மாவட்ட துணைத் தலைவர் சா.முரளிதரன், நெம்மேலிஆர்.பாலகிருஷ்ணன். மன்னை நகர தலைவர். எஸ்.என்.உத்திராபதி, நீடா ஒன்றிய தலைவர் தங்க.பிச்சைக்கண்ணு, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், நீடா நகர செயலாளர் கி.ராஜேந்திரன், மாவட்ட இணைச்செயலாளர் வி.புட்ப நாதன், மன்னை ஒன்றிய தலைவர் மு.தமிழ்செல்வன், பேராசிரியர்
மு.கோ.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.சிங்கார வேலு, மன்னை நகர கழக செயலாளர் வே.அழகேசன், ராயபுரம் ஆர்.மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஜாதி ஒழிப்பு சட்டை எரிப்பு வீரர் பெரியார் பெருந்தொண்டர் ஒரத்தூர் பி.மாணிக்கம் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தஞ்சையில் 16.8.25 மற்றும் 17.08.25 அன்று நடைபெறும் பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி வகுப்பிற்கு மன்னார்குடி மாவட்டத்தின் சார்பாக அதிக இளைஞர்களைப் பங்கேற்க வைப்பது என முடிவு செய்யப்படுகிறது.
தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது எனவும் , ஊர்தோறும் கழக கொடியினை ஏற்றி சிறப்பாக கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
மன்னார்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கனிலும் முடிவடைந்த ‘விடுதலை’ சந்தாக்களைப் புதுப்பித்து வழங்குவதென தீர்மா னிக்கப்படுகிறது.