கிளாஸ்கோ, ஜூலை29– லண்டனில் இருந்து அயர்லாந்தின் கிலாஸ்கோ நகரத்திற்கு 27.7.2025 அன்று காலை ஒரு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 42 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபய்நாயக் என்பவர் திடீரென்று விமான இருக்கையில் இருந்து எழுந்து “அமெரிக்காவுக்கு மரணம், ட்ரம்புக்கு மரணம்” என்றும், “அல்லாஹு அக்பர்” வெடி குண்டு வைப்பேன் என்று கூச்சலிட்டுள்ளார். இதனை அடுத்து விமானத்தில் பயணித்து கொண்டு இருந்த இரண்டு இங்கிலாந்து ராணுவவீரர்கள் உடனடியாக அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடன் ஆபத்தை விளைவிக்கும் எந்த பொருளும் இல்லை என்று தெரிந்த பிறகு அவரை விமானத்தின் பின்னால் உள்ள கழிப்பறையின் அருகில் கட்டி வைத்தனர்
விமானம் கிளாஸ்கோ விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், அய்ரீஸ் காவல்துறையினரால் அபய் நாயக் கைது செய்யப்பட்டார்
லண்டனைச் சேர்ந்த அபய் நாயக் மீது தாக்குதல் மற்றும் விமானத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கிளாஸ்கோ பைஸ்லி ஷெரிப் நீதிமன்றத்தில் நடந்த விசாரனையில் அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித மறுப்பையும் தெரிவிக்கவில்லை.
இந்தச் சம்பவம் தொடர் பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைர லானது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டு நபர்கள் அவரை மடக்கிப் பிடித்து விமானத்தின் தரையில் படுக்க வைத்தனர்.
அவர் மனநலம் பாதிக்கப்பட் டவரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்