கழக மாவட்ட அளவில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மற்றும் கிராமங்கள், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் திராவிடர் கழக இளைஞரணி அமைப்புகளை கட்டமைக்கும் நோக்கத்தோடு கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரல்படி கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி மாவட்ட வாரியாக சந்திப்புப் பயணம் செய்ய உள்ளார். இளைஞரணி தோழர்களை சந்திக்கும் வகையில் இளைஞர்களை ஒருங்கிணைத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்திடுமாறு மாவட்ட கழக இளைஞரணி பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கழக மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், தகுந்த வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும் நல்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தோழர்கள் சந்திப்பு பயண விவரம்
நாள் நேரம் கூட்டம் நடைபெறும் இடம் மாவட்டம்
02-08-2025 சனி காலை 10 மணி ஆத்தூர் ஆத்தூர்
02-08-2025 சனி மாலை 5 மணி திருச்செங்கோடு நாமக்கல்
03-08-2025 ஞாயிறு காலை 10 மணி ஓமலூர் மேட்டூர்
03-08-2025 ஞாயிறு மாலை 5 மணி சேலம் சேலம்
09-08-2025 சனி காலை 10 மணி தருமபுரி தருமபுரி
09-08-2025 சனி மாலை 5 மணி பாப்பிரெட்டிபட்டி அரூர்
10-08-2025 ஞாயிறு காலை 10 மணி கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி
10-08-2025 ஞாயிறு மாலை 5 மணி ஓசூர் ஓசூர்
15-08-2025 வெள்ளி மாலை 5 மணி திருப்பத்தூர் திருப்பத்தூர்
16-08-2025 சனி காலை 10 மணி வாலாஜா பேட்டை இராணிப்பேட்டை
16-08-2025 சனி மாலை 5 மணி வேலூர் வேலூர்
குறிப்பு: மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் அவரவர் பொறுப்பு மாவட்டங்களில் பங்கேற்பார்கள்.
ஊமை.ஜெயராமன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்
திராவிடர் கழகம்