நன்னிலம் முடிகொண்டான் ஜெகநாதன் மறைவு

முடிகொண்டான், ஜூலை 30- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றிய கழக மேனாள் தலைவர் பெரியார்பெருந்தொண்டர் முடிகொண்டான் ஜெகநாதன் (வயது 92) 27-07-2025 அன்று உடல் நலக்குறைவால் மறைவுற்றார். 28/07/2025 காலை 9 மணிக்கு எந்தவித மூட சடங்குகளும் இல்லாமல் இறுதி நிகழ்வு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட, நாகை மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக தோழர்கள் மற்றும் அனைத்து கட்சி தோழர்கள், ஊர் பொதுமக்கள், உறவினர்கள் பெருந்திரளாக இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்

முடிகொண்டானில் தந்தை பெரியார் சிலையை அமைத்தவர், உயர்நிலைப்பள்ளி வருவதற்கு காரணமாக இருந்தவர், பேருந்து நிலையம் வருவதற்கு பாடுபட்டவர், நேரடி நெல் கொள்முதல் நிலையம் வருவதற்கு காரணமானவர், அனைத்து சமுதாயத்திற்கும் (ஜாதிக்கும்) ஒரே சுடுகாட்டை அமைத்து தந்தவர், ஊர் பொதுநலக் காரியங்களில் முன்நின்று நடத்தியவர்,

28.7.2025 அன்று நண்பகல் 1.30 மணிக்கு திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நாகை மாவட்ட தலைவர் நெப்போலியன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, திருமருகல் ஒன்றிய தலைவர் இராச.முருகையன், தஞ்சை மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர் பகுத்தறிவுதாசன், பொன்னாபூர் திருநாவுக்கரசு ஆகியோர் ஜெகநாதன் இல்லத்திற்கு சென்று அவரது வாழ்விணையர் செந்தாமரை, குடும்பத்தினர் அறிவுச்செல்வன், பிரியா ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினர். ஜெகநாதனுக்கு அன்பழகன், வீரமணி என்ற இரு மகன்கள் உள்ளனர்

படத்திறப்பு நிகழ்வுக்கு கழகத் தோழர்கள் அனைவரும் வரவேண்டும் என்று குடும்பத்தார் தெரிவித்தனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *