புதுக்கோட்டை, ஜூலை 30– புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் கழகக் கலந்துறவாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றி னார்.
இந்நிகழ்வில் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன் விடுதலைச் சந்தாக்கள் சேர்க்க வேண்டி யதன் அவசியம், பெரியார் உலகத்திற்கு நிதி திரட்ட வேண்டியதன் அவசியம் மற்றும் அதற்கான வழி காட்டுதல்களுடன் உரை நிகழ்த்தினார்.
மேலும் தலைமையாசிரி யாராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற செ.அ.தர்ம சேகருக்கு மாநில ப.க. துணைத்தலைவர் அ.சர வணன் பயனாடை போர்த்தி வாழ்த்து தெரி வித்தார். நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், இராசேந்திரன், ம.மு.கண்ணன், ஓவியர் இளங்கோ ஆகியோர் கருத்துரை வழங்கினர். புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள்.
மாவட்ட இணைச்செய லாளர் வெ.ஆசைத்தம்பி, மாவட்ட துணைச் செய லாளர் ரெ.மு.தர்மராசு, மாநகரத் தலைவர் செ.அ.தர்மசேகர் ஆகியோர் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரனால் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ப.க.தலைவ ராக இரா.மலர்மன்னன், மாவட்ட ப.க.செயலாளராக இரா.வெள்ளைச்சாமி ஆகியோர் மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் ஒப்புதலுடன் அறிவிக்கப்பட்டார்கள். மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் விடுதலைக்கு 3 ஓராண்டு சந்தாவழங்கினார்.