சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கி, நாடு முழுவதும் 1,500 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 277 இடங்கள் உள்ளன. இந்த வேலை வாய்ப்பு குறித்த விவரங்கள் பின்வருமாறு:
பணியிட விவரங்கள்: தமிழ்நாடு: 277 புதுவை: 9 தெலுங்கானா: 42 கேரளா: 44 ஆந்திரப் பிரதேசம்: 82 கர்நாடகா: 42 குஜராத்: 35 மொத்தம்: 1,500 (30 மாநிலங்கள்)
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம்.(01.04.2021க்கு பின் பெற்றிருக்க வேண்டும்). உள்ளூர் மொழி (எ.கா., தமிழ்நாட்டிற்கு தமிழ்) தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். (SC/ST: 33, OBC: 31, மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு).
ஊதியம்: மெட்ரோ/நகர்ப்புறம்: ₹15,000, ஊரகம்/சிறு நகரம்: ₹12,000. ஒரு வருட ஒப்பந்த அடிப்படை.
தேர்வு முறை: இணைய வழி எழுத்துத் தேர்வு நேர்காணல் மற்றும் உள்ளூர் மொழித்திறன் தேர்வு ஆகியவை அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, வேலூர், கோவை, விருதுநகர், தஞ்சை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில் https://www.indianbank.in/ வழியாக விண்ணப்பிக்கவும்.
கட்டணம்: ரூ.800 (SC/ST: ரூ.175).
விண்ணப்ப தேதி: 18.07.2025 முதல் 07.08.2025 வரை.
கூடுதல் தகவல்: தேர்வு முடிவுகள் மற்றும் நேர்காணல் அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வங்கி நிர்வாகத்தால் வழங்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.
மாநிலத்திற்கு ஏற்ப உள்ளூர் மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
விண்ணப்பிக்கும் முன், அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தகுதி மற்றும் விதிமுறைகளை உறுதி செய்யவும்.
விவரங்களுக்கு: https://www.indianbank.in/career/