‘2032க்குள் முற்றிலும் புகை இல்லா நாடு’ என்ற குறிக்கோளை இலக்காக வைத்து பிரான்ஸ் நாடு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது அந்நாட்டில் கடற்கரை, பேருந்து – ரயில் நிலையம், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி புகைப் பிடித்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், மீண்டும் அதே தவறைச் செய்தால் 15 ஆயிரம் வசூலிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.