மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்கள், பகல்காம் தாக்குதல் தொடர்பாக மக்களவையில், பா.ஜ.க. அரசை விமர்சித்துப் பேசியதற்காக அவருக்குத் தொலைப்பேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாம்.
ஜனநாயகத்தின் அடிப்படையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், இந்திய நாடாளு மன்றத்தில் பேசியதற்காகக் கொலை மிரட்டல் விடுக்கப்படு கிறதென்றால், அது யாருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் – ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கா அல்லது நாடாளுமன்ற ஜனநாயத்துக்கா?
மிரட்டல் விடுத்தவர்கள் எவராயினும், அவர்கள்மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் முற்போக்காளர்கள் அஞ்சுவதில்லை என்பதை மிரட்டல் விடுத்த கயவர்கள் உணரட்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
30.7.2025