தேர்ச்சி
அய்ஏஎஸ், அய்பிஎஸ், அய்எப்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் நேற்று (12.6.2023) வெளியிடப்பட்டது. இந்திய அளவில் 14,624 பேர் தேச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கான முதன்மை தேர்வு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கும் என ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
நீடிக்கும்
மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 16ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான துவரை மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட் வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
பொருந்தும்
பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினால் இழப்பீடு வழங்கும் சட்டம், தனியார் சொத்துகளுக்கும் பொருந்தும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.
நிதி விடுவிப்பு
மாநில அரசுகளுக்கு வரிப் பகிரிவின் 3ஆவது தவணையாக ரூ.1,18,280 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.4,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலக்கெடு
எம்.பி.பி.எஸ். முதலாண்டு மருத்துவ மாணவர் களுக்கு தேர்வு எழுத 4 முறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். மருத்துவ பட்டடிப் படிப்பில் சேர்ந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் படிப்பைத் தொடர அனுமதிக்கப்பட மாட்டாது என தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நடவடிக்கை
கோதுமையை இருப்பு வைக்க விவசாயிகள், வியாபாரிகளுக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கோதுமையின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக 15 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.