தோப்பூர், ஜூலை 29- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகி லுள்ள தோப்பூரில் ஒன்றியத் திராவிடர் கழக புதிய அமைப்பு 27.7.2025 அன்று காலை 11 மணிக்கு மாவட்டக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம் தலைமையில், மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
தோழர் து.கவுசிக் திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளராக ஆறு முகம் தேர்வு செய்யப் பட்டார். இந்நிகழ்வில் முப்பதுக்கும் மேற்பட்ட இருபால் இளைஞர்கள் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக, பெரியார் பெருந்தொண்டர்கள் அமுதன், பலவேசம் ஆகியோர் ஜாதியக் கொடுமைகளைத் கூற, அதற்குச் சரியான பதிலடி யாகத் தந்தை பெரியாரின் சிந்தனைகளே துணை நின்றது எனக் கருத்துரை வழங்கினர்.
அடுத்து, மா.பால் ராசேந்தரம் தந்தை பெரியார் கண்ட திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்வதால் ஏற்படும் பயன்களைக் கூறினார். பெரியார் ஆற்றிய ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்புப் பணிகள் பற்றிய விளக்கவுரை தந்தார்.
இறுதியாக மருத்துவர் செ.வெற்றிவேல் மூடநம்பிக்கை, கடவுள் நம்பிக்கை பற்றி அரியதொரு உரையினை வழங்கி, குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்குச் சான்றி தழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார்.
சிறப்பு அழைப்பாளர் களாக விடுதலை சிறுத் தைகள் கட்சி மேனாள் மண்டலச் செயலாளர் சொ.சு.தமிழினியன், கி.கோபால்சாமி, பிருதிவி ராஜன், த.பேச்சியம்மாள் ஆகியோர் கலந்து கொண் டனர். இறுதியாக புதிய ஒன்றிய அமைப்பாளர் நன்றி கூறிடக் கூட்டம் நிறைவுபெற்றது.