தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில் வகுப்பெடுக்கும் பெருமக்களுக்கும், பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், பெரியாரியல் பாடங்களை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ள வசதியாக காட்சிப்படுத்தும் “புரஜெக்டர்” (Projector) புதிய சாதனம் ஒன்றினை ‘எம்பவர்’ அறக் கட்டளை மூலம் திராவிடர் கழக வெளியுறவு துறை செயலாளர் கோ.கருணாநிதி, திராவிடர் கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மூலமாக திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமாரிடம் 11.06.2023 அன்று நீடாமங்கலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப்பட்டறையில் அன்பளிப்பாக வழங்கினார்.
மாநில ப.க. ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கோ.கணேசன், மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் சிவஞானம் ஆகியோர் உடனிருந்தனர்.
கோ.கருணாநிதி அவர்களை கழக துணைத் தலைவர் பாராட்டி பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.