டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தனக்கு எதிரான உள் விசாரணை குழுவின் பரிந்து ரையை ரத்து செய்யக்கோரி நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்’. ‘விசாரணை குழு மீது அதிருப்தி இருக்கும் போது, எதற்காக அதன் முன் ஆஜராகி உங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தீர்கள்’ என நீதிபதி தத்தா கிடுக்கிப்பிடி கேள்வி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. இதில் குடியுரிமையை நிரூபிப்பதற்கான 11 ஆவணங்களில் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களையும் ஏற்க அறிவுறுத்தியுள்ளது.
* இடஒதுக்கீடு வழங்கியும் நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் தெலங்கானா அரசு: பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு. டில்லியில் போராட ரேவந்த் முடிவு.
தி இந்து:
* இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிரான கருத்துகளுக்கு மத்திய பிரதேச அமைச்சர் குன்வர் விஜய்ஷா வழங்கிய மன்னிப்பின் தன்மை குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி. பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*தேர்தல் ஆணையம்-பாஜக தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (‘NRC) பின்கதவு வழியாக கொண்டு வர முயற்சிப்பதாக மம்தா கண்டனம்.
* பகல்காம் தாக்குதலுக்கு வழிவகுத்த பாதுகாப்பு குறைபாடுகள், தாக்குதல் நடத்திய அனைவரையும் கைது செய்யத் தவறியது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, ஆயுதப்படைகளால் ஏற்பட்டதாக கூறப்படும் விமான இழப்புகள் – இவை அனைத்தையும் எதிர்க்கட்சிகள் நேற்று (28.7.2025) மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தின் போது எழுப்பின.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மூன்று மாதங்களில் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு என்பது சரியான ஒன்றாகும். இந்த விவகாரத்தில் அரசியல் அமைப்பில் இருப்பதை மீண்டும் குடியரசுத் தலைவர் திருப்பி கேட்பது போன்று உள்ளது. அதை ஏற்க முடியாது.. எனவே இந்த கோரிக்கை நிலைக்கத்தக்கது இல்லை என்பது மட்டுமல்லாமல் கடிதத்தை பராமரிக்க முடியாத தன்மை உள்ளது. எனவே அதனை குடியரசுத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வாதம்.
* துணை குடியரசுத் தலைவர் தேர்தலை நாடாளு மன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவதற்கு சற்று முன்பு தேர்தல் ஆணையம் நடத்த வாய்ப்பு
* பல்கலைக்கழகங்கள் மூலம் பார்ப்பனீயத்தை வளர்க்க ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் முயற்சிக்கிறது, கேரள உயர்கல்வி அமைச்சர் கண்டனம். ஆர்.எஸ்.எஸ்-தொடர்புடைய மாநாட்டில் கலந்து கொண்ட துணைவேந்தர்களை கேரள உயர்கல்வி அமைச்சர் சாடினார்.
* எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரின் நிரப்பப்படாத பணியிடங்கள் குறித்த தரவுகளை ஒன்றிய அரசு தர மறுக்கிறது, ஆர்.டி.அய். ஆர்வலர் வெங்கடேஷ் நாயக் புகார்.
தி டெலிகிராப்:
* இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “போர் நிறுத்தத்திற்கு” மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறியதையும், மோதலின் போது அய்ந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் கூறியதையும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த மக்களவை விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் கேள்வி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மம்தா அரசாங்கத்திற்கு ஒரு பெரிய நிவாரணமாக, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 80 பேர் உட்பட ஓபிசி துணைக்குழுக்களின் புதிய பட்டியலை செயல்படுத்துவதற்கான கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது, மேலும் சட்டம் இயற்றாமல் அத்தகைய பட்டியலை நிர்வாகம் அறிவிக்க முடியும் என்பது நன்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறியது.
– குடந்தை கருணா