தமிழ்நாட்டில் ஹிந்திக்கு இடமில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

1 Min Read

அரசியல்

சென்னை, ஜூன் 13- தி.மு.க. தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது.

இந்தியாவின் அனைத்துக் குடி மக்களும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துவரும் நிலை யில், ஒன்றிய அரசும், அதன் நிறுவனங்களும் பிற இந்திய மொழிகளைவிட ஹிந்திக்கு அனைத்து வழிகளிலும் தேவையற்ற மற்றும் நியாயமற்ற ஆதரவைத் தொடர்ந்து வழங்கு கின்றன.

மேலும், மக்கள் நலனுக்காக அல்லாமல், ஹிந்தியை நம் தொண்டையில் திணிக்கவே அவர்கள் தங்கள் மதிப்புமிக்க வளங்களைச் செலவிட விரும்புகிறார்கள்.

இவ்வகையில் சமீபத்தில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அநீ தியானது. இதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் ஹிந்தி பேசாத மக்களையும் மற்றும் ஹிந்தி  பேசாத ஊழியர்களையும் அவமதித்த தற்காக மன்னிப்பு கேட்கவேண்டும்.

இந்தியாவில் ஹிந்தி பேசாத குடிமக்கள் தங்கள் கடின உழைப் பாலும், திறமையாலும் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல் வதில் தங்களின் பங்களிப்புகளை அளிக் கும்போதிலும், அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதைச் சகித்துக் கொள்ளும் காலம் மலையேறிவிட்டது.

ஹிந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடும், தி.மு.க.வும் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம். ஒன்றிய  அரசில் ரயில்வே, அஞ்சல் துறை, வங்கி, நாடாளு மன்றம் என  அனைத்து  இடங்களிலும்  எம்மையும், எமது  மக்களையும் அன்றாடம் பாதிக் கும் வகையில் ஹிந்திக்கு வழங்கப்படும் அவசியமற்ற சிறப்புநிலையை நீக்குவோம்.

நாங்கள் எங்கள் வரிகளை செலுத்துகி றோம், முன்னேற்றத்திற்குப் பங்களிக் கிறோம், எங்கள் வளமான மரபு மற்றும் இந்த நாட்டின் பன்முகத் தன்மையில் நம்பிக்கை கொண் டுள்ளோம். எங்கள் மொழிகள் சமமாக நடத் தப்படவேண்டும். எமது மண்ணில் தமிழுக்குப் பதிலாக ஹிந்தியைத் திணிக்கும்  எந்த முயற்சி யையும்  எதிர்ப்போம். 

-இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *