சென்னை, ஜூன் 13 பாவலரேறு பெருஞ்சித்திரனார் 28 ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி மேடவாக்கம் வடக்குப்பட்டு சாலை பாவலரேறு தமிழ் களம் அரங்கில் 11.6.2023 அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.
இறை பொற்கொடி தலைமை தாங்கினார். முனைவர் குணத்தொகை வரவேற்புரை ஆற்றினார். மா.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார். சொல்லாய்வு அறிஞர் ப. அருளி சிறப்புரை ஆற்றினார். கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் , மார்க்சிய பெரியார் பொதுவுடைமைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வாலாஜா வல்லவன், பேராசிரியர் ஜெயராமன், கன குறிஞ்சி, நில நிலவழகன், பாவெல், நிலவன் சீராளன், சின்னப்பா தமிழர், தாமரை கோ ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். தோழர் பொழிலன் நன்றி கூறினார்.
நிகழ்வில் வடலூர் கழக செயலாளர் குணசேகரன், திருவொற்றியூர் சேகர், திருச்சி இளங்கோ, பெரியார் மாணாக்கன் ஆகியோர் பங்கேற்றனர்.