அறிவுறுத்தல்
பொறியியல் கல்லூரிகளில் ராகிங் (கேலி) சம்பவத்தை தடுக்க அந்தந்த கல்லூரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
சிகிச்சையை…
ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் அலோபதி மருத்துவ சிகிச்சையை வழங்கலாம் என்ற அரசாணையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
காற்றழுத்தம்…
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து வங்கக் கடலில் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
விவசாயிகளுக்கு…
2022-2023 அரவை பருவத்திற்கு கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.195 விகிதம் வழங்குவதற்கு ஏதுவாக மொத்தம் ரூ.253.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவு.
தடை
புதிய தூக்குப் பாலம் பொருத்தும் பணிகளுக்காக நேற்று (10.11.2023) முதல் பாம்பன் பழைய ரயில் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல இரண்டு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து அடுத்தாண்டு ஜனவரி மாதம் ரயில் வெள்ளோட்டம் விடப்படுமென தகவல்.
நிதியுதவி
பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு உலக வங்கி 1.251 கோடி நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது.
ஜி மெயில்
பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத கோடிக்கணக்கான ஜி மெயில் கணக்குகளை நிரந்தரமாக நீக்க கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
நேரடி வரி
நடப்பு ஆண்டில் ஒன்றிய அரசு நேரடி வரி வருவாயாக ரூ.10.6 லட்சம் கோடி ஈட்டியுள்ளதாம். முந்தைய ஆண்டை விட இது 22 சதவீதம் அதிகமாம்!