ஆதிதிராவிடர், பழங்குடியினர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் நாசர் வழங்கினார்

1 Min Read

திருவள்ளூர், ஜூலை 28- ஆவடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நலத்துறை யின் தாட்கோ வாயிலாக தூய் மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் தூய்மை பணியாளர் சுளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 25.7.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் அமைச்சர் சா.மு.நாசர் தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.13.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூய்மை பணியா ளர்கள் நல வாரியம் சார்பில் 3 நபர்களுக்கு எஸ்மார்ட் அடையாள அட்டைகளையும், 7 நபர்களுக்கு முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளையும், ஆவடி மாநகராட்சியில் 20 பேருக்கு ரூ. 10 லட்சம் கடனுதவிக் கான காசோ லைகளையும் அமைச்சர் வழங்கினார். மேலும் தூய்மை பணியாளர் கள் நல வாரியம் மூலம் வழங்கப் படும் நலத் திட்ட உதவிகளாக பய னாளிகளுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி, இயற்கை மரணம், ஈமச்சடங்கு உள்ளிட்டவற்றுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டன.

மண உதவித்தொகை 20 பேருக்கு ரூ.82ஆயிரம், மகப்பேறு உதவித் தொகை 35 பேருக்கு ரூ.2.10 லட் சம், கல்வி உதவித்தொகை 14 பேருக்கு ரூ.34ஆயிரம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித் தொகை ஒருவருக்கு ரூ.25,000. கண் கண்ணாடி வாங்குவதற் கான உதவித்தொகை 40 பய னாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.13.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆட்சியர், தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர், ஆவடி மாநகராட்சி மேயர், மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *