கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 28.7.2025

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மேற்கு வங்கத்தில் ‘மொழி இயக்கம்’ (பாஷா அந்தோலன்) இன்று தொடங்குகிறார் மம்தா. பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களை வங்க தேசத்தவர்கள் என அடைத்து வைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டம் என அறிவிப்பு.

* தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் கல்வி நிதி என்கிற பிடிவாதத்தை கைவிட்டு தமிழ்நாடு கல்வி நிதிக்கு தர வேண்டிய ரூ.2151 கோடியை அளித்திடுக, பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு அளித்திடுவது குறித்து தெலங்கானா அமைச்சரவை இன்று முடிவு எடுக்கும், முதலமைச்சர் ரேவந்த் அறிவிப்பு.

தி இந்து:

* எஸ்.சி., எஸ்.டி. ஓபிசி பிரிவினருக்கு எதிராக வேலை வாய்ப்புகளை மறுக்க ‘பொருத்தமானவர்கள் இல்லை’ என்ற பிரிவு பயன்படுத்தப்படுகிறது: காங்கிரஸ் கடும் கண்டனம். இது வெறும் அலட்சியம் மட்டுமல்ல, “பகுஜன்களை” கல்வி, ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளில் இருந்து விலக்கி வைப்பதற்கான “நன்கு திட்டமிடப்பட்ட சதி” என ராகுல் காட்டம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பீகார் வாக்காளர் திருத்தத்தை நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்தை ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்துகிறது, குறைபாடு உள்ள தரவு மற்றும் விலக்கு அபாயம் இருப்பதாக குற்றச்சாட்டு

தி டெலிகிராப்:

* பெண்கள் பெயரில் ஆண்கள் மோசடி: மகாராட்டி ராவில் 14,000 ஆண்கள் போலி ஆவணங்கள் மூலம் லட்கி பஹின் யோஜனா பணத்தைப் பெறுவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை (WCD) நடத்திய தணிக்கையில் கண்டுபிடிப்பு. ஆன்லைன் படிவங்கள் மூலம் பெண்களாகப் பதிவு செய்து ஆண்கள் பெரிய அளவிலான முறைகேடுகள் ஈடுபட்டுள்ளது அம்பலம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பீகாரில் சிராக் பஸ்வான் – கிஷோர் குமார் கூட்டணி என்கிறார் நாடாளுமன்ற உறுப்பனர் பப்பு யாதவ் பீகாரின் சட்டம்-ஒழுங்கு குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், சிராக் பாஸ்வானுக்கும் பிரசாந்த் கிஷோருக்கும் இடையிலான கூட்டணி வரவிருக்கும் தேர்தல்களில் இருப்பதாக கூறியுள்ளார்.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *