பொன்னேரி, ஜூன் 13- கும்மிடிப்பூண்டி மாவட்டம் பொன்னேரியில் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் ‘திராவிட மாடல்’ விளக்க தெருமுனை கூட்டம் 10.6.2023 மாலை 6 மணியளவில் பொன்னேரியில் உள்ள அறிஞர் அண்ணா சிலை முன்பு நடைபெற்றது.
மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் கெ.முருகன் தலைமையில் பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர் வரவேற்றார்.
மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலை வர் கு.செல்வி, செயலாளர் மா.இளையராணி, செ. உதயகுமார், பொன்னேரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் வழக்குரைஞர் கே.மூர்த்தி, மகளிரணி மாவட்ட செயலாளர் ச.நதியா, பொதுக்குழு உறுப்பினர் ந.கசேந் திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன் னீர் செல்வம் தொடக்கவுரை ஆற்றினார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் சோழ வரம் ப.சக்கரவர்த்தி, திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட தலைவர் க.சூரியா, மாணவர் ஜ.தமிழ் அரிமா உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றி னார். பொன்னேரி நகர தலைவர் வே.அருள் நன்றி கூறினார். கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன், கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலாளர் ஜெ.பாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.