தஞ்சை காவேரி அன்னை கலை மன்ற நாடக விழா

2 Min Read

தஞ்சை, ஜூலை28- நாடகவேல் மா.வீ.முத்துவின் தஞ்சை காவேரி அன்னை கலை மன்றத்தின் 55 ஆம் ஆண்டு நாடக விழா தஞ்சையில் சிறப்புடன் நடைபெற்றது.

23-07-2025 முதல் 31-07-2025 வரை 9 நாள்கள் தஞ்சாவூர் – அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நாடகவேல் மா.வீ.முத்துவின் தஞ்சாவூர் காவேரி அன்னை கலை மன்றத்தின் சார்பில் 55 ஆம் ஆண்டு நாடகப் போட்டி நாடக விழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணிக்குத் தொடங்கி மூன்று சமூக நாடகங்கள் நடைபெறுகின்றன.

நேற்று (27-07-2025) மாலை அன்று நடைபெற்ற நாடகங்களுக்கான பரிச ளிப்பு பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று பரிசுகள் வழங்கி உரையாற்றினார்

நாடகக் கலையரசு பாபநாசம் பெரியார் விருத் தாளர் கு.ப. ஜெயராமன், மாவட்ட துணை தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரகுமார், பாப நாசம் திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை உறுப்பினர் திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்  பரிசுகள் வழங்கி பாராட்டி  சிறப்புரையாற்றினார் .முன்னதாக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் தஞ்சை காவேரி அன்னை கலை மன்ற உறுப்பினர் ஏ.வி.என் குணசேகரன் நன்றி உரையாற்றினார்.

மாவட்ட மகளிர் அணி தலைவர் அ.கலைச்செல்வி, பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல், பகுத்தறிவாளர்கழக பொறுப்பாளர் ஏழுமலை, தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வன் ,அ. சாக்ரடீஸ் உள்ளிட்ட கழகத் தோழர்கள், பொதுமக்கள், ஆர்வலர்கள், நாடக மன்ற உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்

தமிழ்நாடு முழுவதும் இருந்து 27க்கும் மேற்பட்ட நாடகக் குழுவினர் நாடகப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெறுகின்றனர். அந்த 55 ஆண்டுகளாக தொய்வின்றி தொடர்ந்து தஞ்சையில் காவேரி அன்னை கலை மன்றத்தின் சார்பில் நாடகப் போட்டி நடத்தி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால்  நாடகவேல் விருது பெற்ற மா.வீ.முத்துவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி பயனாடை அணிவித்து நன்கொடைகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *