மதுரை, ஜூலை28- மதுரை பெரியார்-வீரமணி அரங்கில் 27.7.2025 அன்று மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையார் தொண் டறம் நூல் ஆய்வுரை தொடர் சொற்பொழிவு நடைபெற்றது.
மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் ஆசிரியர் அவர்களின் 23-ஆம் தேதி விடுதலையின் அறிக்கையின்படி இன்று பெரியார் உலகத்திற்கு பெரியார் உலகத்திற்கு நிதியளிக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டுவோம். தமிழர் தலைவரின் இலட்சிய திட்டத்தை நிறைவேற்ற உறுதியேற்போம் என உருக்கமாகப் பேசினார்.
மாவட்டத்தலைவர் அ.முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.லீ.சுரேசு வரவேற்புரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.எடிசன்ராச, பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் மாநில வா.நேரு தொடக்கவுரையாற்றினார்.
திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச.இராசேந்திரன் ஊக்கவுரை வழங்கினார். உளவியல் வல்லுனர் ஜெ.வெண்ணிலாஆய்வுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் 23.7.2025 ஆம் தேதி விடுதலையில் வெளிவந்த ஆசிரியர் அவர்களின் அறிக்கையினை வாசித்து பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
திராவிட மாண வர் கழக மாநில துணைச்செயலாளர் சீ.தேவராசபாண்டியன் நன்றி கூறினார்.கழகத்தின் அனைத்து நிலை பொறுப் பாளர்களும் தோழர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள்.