எந்த மனிதனும் மற்ற ஜாதியைப் பற்றிச் சந்தேகப்பட்டாலும் தன் ஜாதியைப் பற்றி நம்பிக்கையாகவும் மேன்மையாகவும் கற்பித்துக் கொண்டு, மற்றவர்களைத் தாழ்த்திப் பெருமையடைகிறான். இந்தக் குணம் பார்ப்பானிடத்தில் மாத்திரமல்ல, எல்லா ஜாதியாரிடமும் இருந்து வருகின்றது. ஜாதிபேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான். ஜாதிக் கலப்பை விபச்சாரித்தனமாக எண்ணுகிறான். இந்த மனப்பான்மை ஜாதி ஒழிப்புக்கு எமனாய் இருக்கிறது.
(குடிஅரசு 5.4.1936)