சென்னை. ஜூலை 28- தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு காகிதங்களை ஏற்றுமதி செய் கிறது. இதன் மேம்படுத்தப்பட்ட நகல் எடுக்கும் காகிதம் அறிமுக விழா காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சந் தீப் சக்சேனா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் காகித தயாரிப்பில் ஒரு புதிய மைல்கல்லாக அச்சு மற்றும் எழுதுவதற்கான விவிஅய்டி பிரின்ட் 56 ஜிஎஸ்எம்’ எனும் புதிய வகை காகிதம் வெளி யிடப்பட்டது.
முதலில் சிவகாசி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் காகித நிறுவனத்தின் புதிதாக மேம்படுத்தப்பட்ட நகல் எடுக்கும் காகிதத்தை நிறுவனத்தின் தலைவர்மற்றும்மேலாண்மை இயக்குநர் சந்தீப் சக்சேனா அறிமுகப்படுத்தினார். இந்த புதிய நகல் எடுக்கும் காகிதம் சிறந்த செயல் திறன் மற்றும் நிலைத்தன்மைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தரமான காகிதங் களை வழங்குகிறது.
மேலும், வாடிக்கையாளர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு தொழில் நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சுற்றுச் சூழலுக்கு உகந்த உற்பத்தி பற்றிய செயல் முறைகள் ஆகியன குறித்தும் விளக்கப்பட்டது. இந்நிகழ்வு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால் புதிய உயரங்களை தொடு தல் என்ற தொலைநோக்கு பார்வையுடன் பசுமை உற்பத்தி மற்றும் டிஜிட்டல் ஈடு பாட்டில் அதன் புதுமையான முன்னேற்றங்களை எடுத்துக் காட்டியது.