சென்னை, ஜூலை 28 ஜஸ்டிஸ் ஜி.ஆர். சுவாமிநாதன் மீது வழக்குரைஞர் வாஞ்சி நாதன் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் கடிதம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் ஜஸ்டிஸ் கே.சந்துரு, ஜஸ்டிஸ் டி.அரிபரந்தாமன், ஜஸ்டிஸ் சி.டி செல்வம், ஜஸ்டிஸ் அக்பர் அலி, ஜஸ்டிஸ் பி.கலையரசன், ஜஸ்டிஸ் எஸ் விமலா, ஜஸ்டிஸ் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர்அண்மையில் அறிக்கை விடுத்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டு இருப்ப தாவது:-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் புகார் கடிதம் ஒன்றை வழக்குரைஞர் வாஞ்சிநாதன்அனுப்பி, விசாரணை நடத்தக் கோரியுள் ளார். அவர் அனுப்பிய புகார் மனு, தற்போது அவருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு வழிவகுத் துள்ளது.
டிவிஷன் பெஞ்சில் அமர்ந்திருக்கும் நீதிபதியால் அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
சி.ரவிச்சந்திரன் அய்யர் எதிர் நீதிபதி ஏ.எம். பட்டாச்சார்ஜி, 1995 (5) SCC 457 வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு நீதிபதியின் நடத்தை, முறைகேடு அல்லது தவறான நடத்தைக்கு எதிராக வழக்குரைஞர்கள் நேரடி நடவடிக்கை எடுக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நீதிபதியின் நடத்தைக்கு எதிராக யாராவது மனு அனுப்ப விரும்பினால், அதை நேரடியாக இந்தியத் தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியத் தலைமை நீதிபதி, உண்மைத்தன்மையை அறிய, விசாரணை நடத்த வேண்டும் என்று கருதினால், நீதிபதிக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து “உள்ளக விசாரணை” நடத்த முடியும். கூறப்படும் குற்றச்சாட்டுகளில் முதன்மை யான உண்மை இருப்பதாக உள்ளகக் குழு கருத்து தெரி விக்கும் போது தான், அவர் இந்த விவகாரத்தில் உரிய நட வடிக்கை எடுக்கவோ அல்லது உத்தரவிடவோ முடியும். இதுவே தற்போது நடைமுறையில் உள்ள நடைமுறை. அண்மையில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வழக்கிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
எனவே, வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அனுப்பிய மனு மீது, இந்திய தலைமை நீதிபதி அத்தகைய நடவடிக்கை எடுக்காத நிலையில், சம்பந் தப்பட்ட வழக்குரைஞர் மீது நடவடிக்கை எடுப்பது அவசரப்பட்ட (premature) நடவடிக்கையாகும் என்று நாங்கள் கருதுகிறோம்.
ஜூலை 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழக்குரைஞருக்குச் அழைப் பாணை அனுப்பப்பட்டது உண்மைதான்.
வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அனுப்பியுள்ள மனுவின் மீது இந்திய தலைமை நீதிபதி என்ன முடிவை எடுப்பார் என்று இன்னும் தெரியாத நிலையில், வேறு எந்த நடவடிக்கையையும் கைவிடுமாறும், காத்திருக்கு மாறும் கற்றறிந்த நீதிபதிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
நீதித்துறையின் நலனுக்காக மட்டுமே இந்த வேண்டுகோளை நாங்கள் வெளியிடுகிறோம், இந்த விஷயத்தில் எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.