சென்னை, ஜூலை 28– ‘‘மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்த போது அக்கறையுடன் விசாரித்து தாம் நலம்பெற வாழ்த்திய அனைத்துக் கட்சித் தலைவர்கள், நீதியரசர்கள் உள்ளிட்ட தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி’’யை இல்லம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து நேற்று (27.7.2025) இல்லம் திரும்பிய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலை தளங்களில் வெளியிட்ட பதிவு வருமாறு:–
நலம்பெற்று வீடு திரும்பினேன்!
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் – மக்கள் பிரதிநிதிகள் – நீதியரசர்கள் – அரசு அதிகாரிகள் – திரைக் கலைஞர்கள் – என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
மருத்துவர்கள் – செவிலியர்களுக்கு நன்றி!
மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்!
உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது வலைதளத்தில் பதிவிட் டுள்ளார்.