செய்திச் சுருக்கம்

1 Min Read

பெற்றோர்களே, குழந்தைகளிடம் அலைபேசி கொடுக்கிறீர்களா?

உங்கள் குழந்தை அதிக நேரம் அலைபேசி பயன்படுத்துகிறதா?அது பல்வேறு அபாயங்களுக்கு இட்டுச் செல்லும் என்று Journal of Human Development and Capabilities நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 163 நாடுகளில் 20 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், அதிகமாக அலைபேசி பயன்படுத்தும் 13 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு தற்கொலை எண்ணம் அதிகரிப்பது, சமூக விலக்கம், அதீத கோபம் உள்ளிட்ட தீவிர மனநலப் பிரச்சினைகளுக்கு ஆளாவார்களாம்.

தி.மு.க.வில் இணைந்த 500 பேர்

பாமக, அதிமுக பலமாக உள்ள தருமபுரி, நல்லம்பள்ளி ஒன்றியத்திலிருந்து புதிதாக 500 பேரை திமுகவில் இணைத்துள்ளனர். கடந்த தேர்தலில் 5 தொகுதிகளையும் கோட்டை விட்டதால் இம்முறை வெற்றி முனைப்போடு திமுகவினர் வேலை பார்த்து வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு மாற்றுக்கட்சியினர் 300 பேர் திமுகவில் இணைந்த நிலையில், இது பேசுபொருளாகியுள்ளது.

இந்தியாவின் பரம ஏழை இவர்தான்… ஆண்டு வருமானம் ரூ.3

இந்தியாவிலேயே மிகவும் ஏழை மத்தியப் பிரதேசத்தில் உள்ள விவசாயி ராம்ஸ்வரூப்தான் போல. இவரது ஆண்டு வருமானம் வெறும் ரூ.3 என தாசில்தார் கையெழுத்திட்ட சான்றிதழ் வைரலாகி வருகிறது. அதன்படி, அந்த விவசாயியின் மாத வருமானம் 25 பைசாவாக உள்ளது. இந்த விவகாரம் வைரலானதைத் தொடர்ந்து, சான்றிதழில் சிறிது தவறு ஏற்பட்டதாக கூறி, அந்த விவசாயிக்கு ஆண்டு வருமானம் ரூ.30,000 என்றபடி புதுச் சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசுப் பணியிடங்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி-க்கு பாரபட்சம்

நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசின் பல்கலை.,களில் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாதது கல்வி அமைச்சகம் வழங்கிய தரவுகளில் தெரியவந்துள்ளது. ஓபிசி பிரிவினருக்கான 80 சதவீதம் இடங்களும், ஆதி திராவிடர்களுக்கான 64 சதவீதம், பழங்குடியினருக்கான 83 சதவீதம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மொத்தம் நிரப்பப்பட்ட 14,062 ஆசிரியர் பணியிடங்களில் 9,254 இடங்கள் பொதுப்பிரிவினரால் நிரப்பப்பட்டுள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *