அருமைத் தோழர் வாஞ்சிநாதன், தன் சொந்த பயன்களுக்காக, சட்டத்தையோ, நீதிமன்றத்தையோ பயன்படுத்தியதில்லை. தன் கட்சிக்காரர்கள் மூலமாக வசதியான வாழ்க்கைக்காகவும் நீதித்துறையை நாடியதும் இல்லை. உங்களுக்காகவும், எனக்காகவும், நமக்காகவும்தான் எப்போதும் நீதிமன்றத்திலும் போராடி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாகத்தான் உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள்மீது ‘ஜாதி ரீதியாகச் செயல்படுவதாக’ உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதிக்குப் புகார் அளித்திருக்கிறார்.
இது எப்படி நமக்குத் தெரியும்?
மாண்புமிகு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் தான் வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நடவடிக்கையின் மூலம் தமிழ் உலகத்திற்கு அதைக் கொண்டு வந்திருக்கிறார்.
‘இவ்வளவு அர்ப்பணிப்போடும், துணிச்சலோடும் செயல்படுகிறாரே?’ எனப் பல புதியவர்கள் வாஞ்சி நாதன் Vanchi Nathan பற்றிப் புரிந்து கொள்வதற்கும் மாண்புமிகு நீதிபதி அவர்களே காரணமாக இருந்திருக்கிறார்.
அவர் வாஞ்சிநாதனை நோக்கி ‘நான் ஜாதி ரீதியாகச் செயல்படுகிறேனா?’ என கேட்டதற்கு,
எங்களின் ஜஸ்டிஸ், நீதிபதிகளைத் தாண்டிய சட்ட வல்லுநரான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், ‘ஆமாம். நீங்கள் ஜாதி உணர்வோடு தான் செயல்படுகிறீர்கள்’ என ஆதாரத்தோடு இந்தப் பிரச்சினையைச் சரியான கட்டத்திற்கு நகர்த்தி யிருக்கிறார்.
அருமைத் தோழர்களே, ஆசிரியரின் அறிக்கை யைப் படித்துத் தெளிவு பெறுங்கள்.
– இவ்வாறு வே.மதிமாறன் தெரிவித்துள்ளார்.