சென்னை, ஜூலை 27- பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதில் 28,896 இடங்கள் நிரம்பியுள்ளன. 142 கல்லூரிகளை ஒருவர் கூட தேர்வு செய்யவில்லை.
முதல் சுற்று கலந்தாய்வு
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு கடந்த 14-ஆம் தேதி ஆன்லைனில் தொடங்கியது. 16-ஆம் தேதி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யவும், 17-ந் தேதி தற்காலிக ஒதுக்கீடு ஆணை வெளியிட்டும், 17 மற்றும் 18-ந் தேதிகளில் அந்த ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்யவும். அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
இப்படியாக நடந்த முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்த வர்களுக்கான இறுதி ஒதுக் கீடு ஆணை நேற்று வெளியி டப்பட்டது. அதன்படி,முதல் சுற்று கலந்தாய்வில் மொத்தம் 26,719 இடங்கள் நிரம்பியிருக் கின்றன. இதுதவிர அரசு பள்ளி மாணவ-மாணவிக ளுக்கான 7.5சதவீத உள் ஒதுக் கீட்டின் கீழ் 2,177 இடங்கள் நிரம்பியுள்ளன.
28,896 இடங்கள் நிரம்பின
ஆகமுதல் சுற்று கலந்தாய்வு முடிவில் என்ஜினீயரிங் படிப்புகளில் 28,896 இடங்கள் நிரம்பி இருப்பது புள்ளி விவரங்களின்படி தெரியவருகின்றன. தமிழ்நாட்டில் 425 பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 1,87,227 இடங்களில் 28,896 இடங்கள் போக மீதம். 1,58,331 இடங்கள் இருக்கின்றன. முதல் சுற்று கலந்தாய்வு நிறைவில், பொதுப்பிரிவில் மொத்தம் 425 கல்லூரிகளில் 30 கல்லூரிகளில் 60 சதவீதத் துக்கு மேல் இடங்களும், 43 கல்லூரிகளில் 40 சதவீதத் துக்கு மேற்பட்ட இடங்களும் நிரம்பியுள்ளன. 6 அரசுக் கல்லூரிகள் உள் பட 296 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் இடங்கள் நிரம் பியுள்ளதையும், 142 கல்லூரி களில் இதுவரை ஒரு இடம் கூட யாரும் எடுக்காத நிலை யையும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கணினி அறிவியல் படிப்புகள்
கணித்தபடி, ஏற்கனவே பொறியியல் படிப்புகளில் கணினி அறிவியல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பொறியியல் படிப்புகளை அதிக மாணவர்கள் ஆர்வமுடன் எடுத்திருப்பதாகவும், அதிலும் 200-க்கு 200 ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்ற 116 மாணவர்களில் 63 மாணவ-மாணவிகள் கணினி அறிவியல் பொறியியல்படிப்புகளையே தேர்வு செய்திருப்பதாகவும் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
மேலும் சிவில், விண்வெளி, வேதியியல், உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் எதிர்பார்த்தபடி மாணவ-மாணவிகளின் விருப்பம் குறைவாகவே இருந்திருக்கிறது என்றும், பீங்கான்,ரப்பர்-பிளாஸ்டிக், ஜவுளி, பெட்ரோலியம், தோல் பேஷன் டெக், மருந்து போன்ற சிறப்பு படிப்புகளை உயர்கல்வி நிறுவனங்களில் கூட யாரும் எடுக்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது என்றும் அவர் கூறினார். கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்வதில் மாணவ-மாணவிகள் சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை கொண்டு தேர்வு செய்வதை தவிர்த்து, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ள கல்லூரிகளின் விவரங்களை பார்த்து தேர்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
2-ஆவது சுற்று
முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், 2-ஆவது சுற்று கலந்தாய்வுறும் நேற்று ஆன்லைனில் தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க பொதுப் பிரிவில் 98,575 மாணவ மாணவிகளுக்கும், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5சதவீத உள்ஒதுக்கீட்டில் 16,259 மாணவ- மாணவிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.
மண்டலம் வாரியாக நிரம்பிய இடங்கள்
பொறியியல் கலந்தாய்வில் பொதுப்பிரிவில் உள்ள 1,73,24 இடங்களில் சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய 5 மண்டலங்கள் வாரியாக நிரப்பப் பட்ட இடங்கள், காலி இடங்கள் விவரம் வருமாறு:-
மண்டலம் மொத்த இடங்கள் நிரம்பியவை மீதமுள்ளவை
சென்னை 52,096 11,125 40,971
கோவை 63,372 11,832 51,540
திருநெல்வேலி 12,439 1,832 10,607
மதுரை 23,370 1,033 22,337
திருச்சி 21,964 897 21,067
இதுதவிர, அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான 7.5 சதவீ ஒதுக்கீட்டில் மொத்தம் உள்ள 13,986 இடங்களில் 2,177 இடங்கள் போக மீதம் 11,809 இடங்கள் இருக்கின்றன.
பாடங்கள் வாரியாக நிரம்பிய இடங்கள்
பொதுப்பிரிவு பொறியியல் கலந்தாய்வு முதல் சுற்றில், பாடங்கள் வாரியாக நிரம்பிய இடங்களின் விவரம் கிடைத் துள்ளது. அதில் முக்கிய பாடங்களின் விவரங்கள் வரு மாறு:-
பாடங்கள் மொத்த இடங்கள் நிரம்பிய இடங்கள் மீதமுள்ள இடங்கள்
கணினி அறிவியல் 34,011 6,882 27,129
எலக்ட்ரானிக்ஸ் 23,927 4,170 19,757
கம்யூனிகேஷன்
தகவல் தொழில்நுட்பம் 17,235 2,407 14,828
ஏ.அய். மற்றும் தரவு
அறிவியல் 21,068 2,924 18,144
ஏ.அய்., மெஷின் லேனிங்
(சி.எஸ்.இ.) 5,086 637 4449
சைபர் பாதுகாப்பு
(சி.எஸ்.இ.) 5,333 627 4706
எலக்ட்ரிக்கல் மற்றும்
எலக்ட்ரானிக்ஸ் 13,804 1,375 12,429
மெக்கானிக்கல் 15,986 917 15,069
சிவில் 8,668 568 8,100
உயிரி மருத்துவம் 4,409 153 4,256