வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 18 ஆம் ஆண்டு விளையாட்டு விழா

தஞ்சை, ஜூலை 27– தஞ் சாவூர் மாவட்டம், சில்லத்தூர் – வெட்டிக்காட்டில் அமைந்துள்ள பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 25-7-2025 அன்று மாலை 2.30  மணி அளவில் 18 -ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

பள்ளியின் விளையாட்டு விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் வரவேற்க தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே விழா தொடங்கியது.

பள்ளியின் தாளாளர் வீ.அன்பு ராஜ் வழிகாட்டுத லுடன்,  சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ள உரத்த நாடு துணை காவல் கண்காணிப்பாளர் எஸ். கார்த்திகேயன்  முன்னிலையில்,  பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இயக்குநரும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளருமான, டி.கிருஷ்ணகுமார், சில்லத்தூர் ஊராட்சி  மன்ற  தலைவர்  அய்ஸ்வர்யா பாரதி மற்றும் வெட்டிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மைனர் ஆகியோர் பங்கேற்றனர்.

நான்கு வண்ண குழு மாணவர்களின் பெருந் திரள் அணிவகுப்பு நடைபெற்றது. பள்ளியின் விளையாட்டு வீராங்கனைகள் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டத்தை ஏந்தி வந்து  ஒலிம்பிக் கொப்பரையில் சுடர் ஏற்றினர்;.  அடுத்து விளையாட்டுப் போட்டிக்கான உறுதிமொழியும் மாணவர்களால் ஏற்கப்பட்டது.

பல வண்ண பலூன்களை பறக்கவிட்டு சிறப்பு விருந்தினர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். விழாவிற்கு வருகை புரிந்த  அனைவரையும்  பள்ளியின்  முதல்வர் சு.சாந்தி வரவேற்புரை வரவேற்று உரை நல்கினார். வருகை புரிந்த அனைவருக்கும்  பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டன.  சென்ற ஆண்டில்  பள்ளி மாணவர்கள் விளையாட்டில் புரிந்த சாதனைகளை  பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மா.நித்யா விளையாட்டு ஆண் டறிக்கையாக வாசித்தளித்தார்.

தமிழ்நாடு

விளையாட்டுப் போட்டி களிலும், நிகழ்வுகளிலும் பங்கு பெற்று சிறப்பித்த மாண வர்களை பள்ளியின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த  உரத்தநாடு துணை காவல் கண்காணிப்பாளர் எஸ். கார்த்திகேயன்  விழாவில் நடைபெற்ற மாணவர்களின் அணி வகுப்பு மற்றம் நான்கு குழுவினரின் பெருதிரள் உடற்பயிற்சி அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது.

இந்நிகழ்வு என்னுடைய பழைய நினைவுகளை முன்நிறுத்தும் வண்ணம் சிறப்பாக இருந்தது, மாணவர்கள் ஆர்வம், வேகம், மூச்சுப் பயிற்சி என ஒருசேர விளங்க வேண்டும்  எனவும், தனது சிறப்புரையில் பாராட்டுரை வழங்கினார்.  மேலும் கடைசி அனைத்து நிகழ்வுகளை கண்டு ரசித்து அனைத்து  மாணவர்களையும் சிறப்புற நடத்திய அனைத்து ஆசிரியர்களையும் மேடைக்கு அழைத்து பாராட்டினார்.

விளையாட்டுப் போட்டி களில் பங்கு பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்க ஒருங்கிணைப்பாளர், ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளியின் கணித ஆசிரியர் மா.ரேகா நன்றியுரை வழங்க நாட்டுப்பண்ணுடன் இனிதே விழா முடிவு பெற்றது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *