சென்னை,ஜூன் 14 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து சிப்காட் தொழிற் பூங்காக்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு 2 கட்டங் களாக 20 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட 3ஆ-ம் நிலை எதிர் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு ஆலையை ரூ.187 கோடியே 20 லட்சம் மதிப்பில் நிறுவுவதற்கான திட்டப் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (13.6.2023) தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டத்துக்கான முதற் கட்ட பணிகள் 15 மாதங்களில் நிறைவு பெற இருக்கின்றன. இதன் மூலம் 2 ஆயிரத்து 92 ஏக்கரில் அமைந்துள்ள ஓசூர் சிப்காட் தொழிற்பூங்கா, 989 ஏக்கரில் அமைந்துள்ள சூளகிரி சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் ஓசூர் மண் டலத்தில் 1,800 ஏக்கரில் அமைய இருக்கும் புதிய சிப்காட் தொழிற் பூங்காக்களில் உள்ள தொழிற் சாலைகளின் நீர்தேவை பூர்த்தி செய்யப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பயன்பெறும்.
இதனால் இந்த பகுதிகளில் நிலத்தடி நீரும், மேற்பரப்பு நீரும் பாதுகாக்கப்படும், புதிய தொழிற் சாலைகள் அமைந்திட வாய்ப்பு ஏற்பட்டு, கூடுதலாக 6 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன், 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டு நிகழ்வு முடிந்ததும், சிப்காட் நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதியில் இருந்து திருவண்ணாமலை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள 537 பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் கொள்முதல் செய்வதற்காக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.50 லட்சத் துக்கான காசோலையை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வனத்துறை களப்பணியாளர்களின் பயன் பாட்டுக்காக ரூ.2 கோடியே 42 லட்சம் செலவில் 200 மின்சார இருசக்கர வாகனங்கள், ரூ.4 கோடியே 63 லட்சம் மதிப்பில் 50 பொலிரோ ஜீப்புகள், வன உயிரின அவசர மீட்புப் பணிகள் மற்றும் காயமுற்ற வன உயிரினங்களுக்கு அவசர சிகிச்சை அளித்திட ரூ.5 கோடியே 25 லட்சம் செலவில் 35 மீட்பு மற்றும் மறுவாழ்வு வாக னங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சுற் றுச்சூழல், காலநிலை மாற்றம் மற் றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) சுப்ரத் மஹாபத்ர மற்றும் அரசு உயர் அலு வலகர்கள் கலந்து கொண்டனர்.