மக்கள் மத்தியில் மதிப்பிழக்கக் கூடாது! சம்பந்தப்பட்ட நீதிபதி தொடர்ந்து சர்ச்சைக்குரியவற்றைப் பேசி வருகிறார் என்பது உண்மையே!

6 Min Read

*சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது மதுரை வழக்குரைஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்!
* இந்நிலையில், சம்பந்தப்பட்ட நீதிபதியே புகார் கொடுத்த வழக்குரைஞரை அழைத்து மிரட்டுவது சரியா?
நீதிமன்றத்தினுடைய மாண்புகள்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன், சர்ச்சைக்குரிய வகையில் தனக்குள்ள கொள்கைகளை முன்னிறுத்திப் பேசி வருவது உண்மையே! இந்த நிலையில், சம்பந்தப்பட்ட நீதிபதிபற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மதுரை வழக்குரைஞர் வாஞ்சிநாதன், புகார் மனு கொடுத்துள்ள நிலையில், நீதிபதி மாண்பமை ஜி.ஆர்.சுவாமிநாதன், புகார் கொடுத்தவரை நீதிமன்றத்துக்கு நேரில் வரவழைத்து மிரட்டும் வகையில் விசாரிப்பது சரிதானா? நீதிமன்றத்தினுடைய மாண்புகள் மக்கள் மத்தியில் மதிப்பிழக்கக் கூடாது! என்று கேள்வி எழுப்பி  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

மருத்துவமனையில் இருக்கும் நான், தொலைக்காட்சி வழியாகப் பார்த்த செய்தியின் அடிப்படையில் இந்த அறிக்கையை எழுதுகிறேன்.

வழக்கிலிருந்து விலகி விட்ட வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு சம்மன் அளித்த நீதிபதி

நேற்று முன்தினம் (24.7.2025) சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின்போது, அந்த வழக்கிலிருந்து விலகி விட்ட வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு சம்மன் கொடுத்து நீதிமன்றத்திற்கு மாண்புமிகு ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் அழைத்ததாகவும், அவ்வழக்கில் தற்போது தான் வாதாடவில்லை என்பதை வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தெரிவித்த பிறகு, “இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று சொல்லி, “ஜாதி ரீதியாக நான் தீர்ப்பு வழங்குவதாக நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் என்றும் செய்தி வெளிவந்துள்ளது.

இதன் பின்னணியில், கடந்த மாதத்தில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு, மாண்புமிகு ஜஸ்டிஸ் ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களின் பல்வேறு தீர்