இன்ஃபோசிஸ் – டிசிஎஸ் நிறுவனத்தில்
60,000 வேலைவாய்ப்பு
இந்தியாவின் முன்னணி டெக் நிறுவனங்களான இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு 42,000 பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த திட்டமிட்டிருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், 2026ஆம் ஆண்டில் 20,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளதாகவும், குறிப்பாக புதிதாகப் படித்து பணிக்கு வருபவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இன்ஃபோசிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
தி.மு.க.வில் இணைந்த
அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள்
அ.தி.மு.க., பா.ஜ.க. நிர்வாகிகள்
அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் திமுக அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார். இதனால், திமுகவின் வாக்கு வங்கியை பெருக்கும் வகையில், இளைய மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், செந்தில் பாலாஜி முன்னிலையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
யானை தாக்கி 2,800 பேர் பலி அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் 2019-2023 ஆண்டு வரை இந்தியாவில் யானை தாக்குதல்களால் 2,800-க்கும் மேற்பட்டோர் பலியானதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இந்த தகவலை கூறியுள்ளார். நாட்டில் அதிகபட்சமாக ஒடிசாவில் 624 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 2020-2024 ஆண்டு வரை 378 பேர் புலிகள் தாக்கி உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள வேற்று மாநிலத்தவர்கள்
திருவள்ளூர் சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞரின் போட்டோ வெளியாகியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வெளி மாநிலத்தவர்களை அரசு முறைப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது அதிகபட்சமாக, ஒடிசா-2,86,500, பீகார்-2,47,016, ஜார்க்கண்ட்-1,90,518, மேற்கு வங்கம்- 1,84,960, அசாம்-92,105, 2.9., உ.பி.-89,462, சத்தீஸ்கர் -24,882, ம.பி. -14,440 மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து விட்டீர்களா?
2024-2025 நிதியாண்டுக்கான (Assessment YR 2025-2026) வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கல் செய்ய காலக்கெடு செப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்.15-க்கு பின் தாக்கல் செய்யப்பட்டால், ₹5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ₹5,000-ம், 5 லட்சத்துக்கு குறைவானவர்களுக்கு ₹1,000-ம் அபராதம் விதிக்கப்படும். அபராதத்துடன் தாமதமான மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய டிச.31 கடைசி நாளாகும்.