வைக்கம் நூற்றாண்டு விழா, கருத்தரங்கம், கிராமங்கள் தோறும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும் காரைக்கால் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்

7 Min Read

அரசியல்

காரைக்கால், ஜூன் 14 – காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 11. 6 .2023 அன்று காலை 10 மணி அளவில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் , மாநில ஒருங்கிணைப்பாளர் சிவ. வீரமணி தலைமையில், காரைக்கால் மாவட்ட கழக தலைவர் ,குரு. கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட செயலாளர், பொன். பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர், மு.பி. பெரியார் கணபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட கழகத் தோழர்கள் ஈரோட்டில் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தும் விதமாக கிராமங்கள் தோறும் கிளை கழகங்களை உருவாக்குதல், பயிற்சி பட்டறைகளை நடத்துதல் விடுதலை சந்தாக்களை சேர்த்தல், கழகத்திற்கு இளைஞர்களை யும், மாணவர்களையும் சேர்ப்பது சம் பந்தமாகவும் தங்களது கருத்துக்களை யும், ஆலோசனைகளையும் வழங்கினர்..

புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி பேசிய போது.

ஈரோட்டில் நடந்த கழகப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படை யில் காரைக்காலில் அதனை செயல் படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து கிராமங்கள் தோறும் பயிற்சி பட்டறைகளையும், வைக்கம் நூற் றாண்டு விழா கருத்தரங்கத்தையும் நடத்த வேண்டும். அதற்கு கழகத் தோழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்..

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் கழகத் தோழர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்களோடு கலந்து பேசுவதன் மூலம் அந்தப் பகுதி யில் உள்ளவர்கள் கழகத்தின் செயல் பாட்டினை அறிந்து கொள்வார்கள் என பேசினார்.

மேலும் விடுதலை சந்தாக்களை விரைந்து சேர்க்க வேண்டும் கழகத்திற்கு மாணவர்களையும், இளைஞர்களையும் சேர்க்க வேண்டும் என கழகத் தோழர் களிடைய விளக்கிப் பேசினார்.

தீர்மானங்கள்

ஆலோசனை கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

ஒடிசா ரயில் விபத்தில் பலியான வர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் ஒரு நிமிடம் அமைதி காத்தும் மரியாதை செலுத்தப்பட்டது. புதுச்சேரி மாநில கழக தலைவர்  சிவ.வீரமணி அவர்களை தலைமைக் கழக அமைப்பாளராக அறிவித்த தலைமைக் கழகத்திற்கு காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள் ளப்பட்டது. 

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கருத்தரங்கம் காரைக்கால், திரு நள்ளாறு, நிரவி, திருப்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி ஆகிய பகுதிகளில் நடத்துவதென முடிவு செய்யப்படுகிறது. 

நவீன குலக்கல்வி திட்டமான புதிய கல்விக் கொள்கையை புதுச்சேரியில் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த துடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டிப்பதோடு புதுவையில் அதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என இக்கூட்டம் புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்கிறது. 

சி.பி.எஸ் இ என்ற ஒன்றிய அரசின் கல்வி திட்டத்தில் ஹிந்திக்கும் படிப் படியாக சமஸ்கிருதத்திற்கும் முக்கியத் துவம் கொடுத்து ஒரே கல்வி என தமிழை அழிக்கும் செயலில், கிராமப்புற மாணவர்களின் கல்வியை சிதைக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய அர சையும் அதற்கு அடிமையாக இருந்து நடைமுறைப்படுத்தும் புதுச்சேரி அர சையும் வன்மையாக கண்டிப்பதோடு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை புதுச்சேரி யில் நடைமுறைப்படுத்துவதை திரும்ப பெற வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 

நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் காரைக்கால் மாவட் டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகி தம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்து காணப் பட்டதற்கான காரணத்தை கண்டறிந்து அதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. 

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஆசிரியர்களின் பற்றாக்குறை நீண்ட காலமாக நிலவி வருகிறது இதனை போர்க்கால அடிப் படையில் நிரப்ப வேண்டும் அதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என இக்கூட்டம் புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்கிறது. 

காரைக்கால் மாவட்ட மருத்துவ மனை பெயரளவில் ஒரு ஆரம்ப சுகா தார மய்யத்தை விட மிகவும் மோசமான நிலையில் செயல்பட்டு வருகிறது இதனை புதுச்சேரி அரசு சீரமைத்து மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும் என கூட்டம் புதுச்சேரி அரசை கேட்டுக் கொள்கிறது. 

புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி கேட்டு வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ந.ரங்கசாமி அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதோடு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி விரைந்து மாநில தகுதி பெற நடவடிக்கை எடுக்குமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 

புதுச்சேரி மாநிலத்தில் பொறியியல் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த இளைஞர்களுக்கு எந்த விதமான வேலை வாய்ப்பும் இல்லை எனவே வேலை வாய்ப்பினை உருவாக்கித் தரும் தனியார் தொழிற்சாலைகளை புது வைக்கு கொண்டு வருவதோடு 20 ஆயிரம் அரசின் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் . மற்ற மாநிலங்களில் உள்ளது போல் புதுவை மாநிலத்திலும் புதுச்சேரி பணியாளர் கள் தேர்வு ஆணையம் தனியாக உரு வாக்கி புதுவை மாநில இளைஞர்களின் வேலைவாய்ப்பு கதவினை திறக்க வேண்டும் என புதுச்சேரி அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 

‘விடுதலை’, ‘உண்மை’ ஆகிய கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நலன் விரும்பிகள் கொண்ட பட்டியல் கள் தயாரித்து மேற்கொள்ளும் நட வடிக்கையை துரிதப்படுத்தி செயல் படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது. 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அண்மையில் அறிவித்துள்ள ஆர் எஸ் எஸ் செயல் திட்டமான பெண்களுக்கு வெள்ளிக்கிழமை விரத இரண்டு மணி நேர விடுமுறை என்ற திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 

பொதுக்குழுவில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின்படி கிராமங்கள் தோறும் பயிற்சி பட்டறைகளை நடத் துவது எனவும், கழகத்திற்கு புதிய இளைஞர்களை சேர்ப்பது – குறிப்பாக கல்லூரியில் பயிலும் மாணவர்களி டையே துண்டறிக்கைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி கழகத்தில் இணைப்பது எனவும் தீர்மானிக்கப்பட் டது. 

குற்றாலத்தில் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் காரைக்கால் மாவட் டத்தில் இருந்து அதிக அளவில் மாண வர்களும், இளைஞர்களும், பெண்களை யும் கலந்து கொள்ள வைப்பது எனவும் இதற்கான பொறுப்பு காரைக்கால் மாவட்ட இளைஞரணி தலைவர் பெரியார் கணபதியிடமும், மாணவர் கழக செயலாளர் அறிவுச்செல்வனிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

காரைக்கால் அரசு பொது மருத்து வமனையை தரம் உயர்த்தி காலியான பணியிடங்களை நிரப்பி அனைத்து துறைகளுக்கும் சிறப்பு மருத்துவர்களை நியமித்து பழைய நிலையில் செயல் படாமல் இருக்கும் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, இசிஜி எடுக்கும் போன்ற மருத்துவ கருவிகளை பழுது பார்த்து செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் நவீன முறையில் புதுச்சேரி மருத்துவ மனைகளில் உள்ளது போல் காரைக் கால் அரசு பொது மருத்துவமனையிலும் நவீன புதிய கருவிகளை கொண்டு இயக் குவதோடு எம் ஆர் அய் ஸ்கேனையும் கொண்டு வர வேண்டும் என புதுச்சேரி அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கி றது. 

13.5.2023 அன்று ஈரோட்டில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரை மிக வும் ஆழமானதாகும் பொதுக்குழுவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்மானங் களில் நூற்றாண்டு விழாக்கள் பற்றிய தீர்மானத்தை கழகத்தின் தலைவர் ஆசிரியர் முன்மொழிய அரங்கமே எழுந்து நின்று கரவொளி மூலம் அதனை செயல்படுத்துவோம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண் டோம் . அந்த உறுதி மொழியை செயல் படுத்த உழைப்பதுடன் அடுத்தடுத்து நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகளாக கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் கொடுத் துள்ள திட்டங்களான ஊர் தூறும் கிளை கழகங்களை உருவாக்குதல், ஒவ் வொரு மாவட்டத்திற்கு ஒரு விடுதலை ஒருங்கிணைப்பாளர். மாவட்ட கழக பதிவேடுகளை ஆய்வு செய்தல், ஒவ் வொரு கழக மாவட்டங்களிலும் கிளை, ஒன்றிய, நகர மாவட்ட கழகங்களின் பொறுப்பாளர்களின் விவரங்களை முகவரியுடன் பெறுதல், இயக்க செயல்பாடுகளை விரைவுப்படுத்துதல் – இதனை காரைக்கால் மாவட்டத்தில் விரைந்து செயல்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்வரும் 18.6.2023 அன்று உளுந் தூர்பேட்டையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டத்தில் காரைக் காலில் இருந்து அதிக அளவில் கழகத் தோழர்கள் கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ந. அன் பானந்தம், க.பதி ஜெய்சங்கர், இளைஞர் அணி செயலாளர் லூயிஸ்பியர், மாவட்ட துணைத் தலைவர் செந் தமிழன், செல்லூர் பன்னீர், மகளிர் அணி தலைவி க.சிறீதேவி, பெரியார் பிஞ்சு செ. இனியவன், இளைஞர் அணி அமைப்பாளர், மு.க.ஸ்டாலின், மாண வர் கழக செயலாளர், அறிவுச்செல்வன், பேட்டை ராசரத்தினம் ஆகிய கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *