கச்சத் தீவை மீட்க வேண்டும் இராமேசுவரம் மாநாட்டுத் தீர்மானம் (26.7.1997)

3 Min Read

கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று முதன் முதலாக திராவிடர் கழகம் இராமேசுவரத்திலே கச்சத் தீவு மாநாடு கூட்டி (26.7.1997) தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வழக்குத் தொடுத்தார். (29.7.1997).

திராவிடர் கழகம் நடத்திய
கச்சத்தீவு மீட்பு மாநாட்டுத் தீர்மானம்

26.7.1997 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் நடைபெற்ற தமிழக மீனவர் பாதுகாப்பு – கச்சத்தீவு மீட்புரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: பாக். ஜலசந்தியின் இருபுறமும் இருக்கும் தமிழ் நாட்டின் மேற்குக் கரையில் உள்ள மீனவர்களும், தமிழீழத்தின் கிழக்குக் கடற்கரையில் உள்ள மீனவர் களும் மொழி, கலாச்சார ரீதியில் பல ஆயிரம் ஆண்டு காலமாக நெருங்கிய உறவினால் பிணைக்கப்பட்டுள் ளார்கள். ஆங்கிலேயர்கள் வெளியேறும் காலம் வரை தங்கு தடையற்ற படகுப் போக்குவரத்து இரு நாடு களுக்கும் இடையே நடைபெற்று வந்தது. தமிழ்நாட்டில் உள்ள வேதாரண்யம், அதிராம் பட்டினம், தொண்டி, மண்டபம், இராமேசுவரம் போன்ற துறைமுகங் களுக்கும், தமிழீழப் பகுதியில் உள்ள பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, ஊர்க்காவல் துறை, நெடுந்தீவு, மாதகல், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை போன்ற துறை முகங்களுக்கும் இடையே தொன்று தொட்டுப் பயணிகள் மற்றும் வணிகப் போக்குவரத்து நடைபெற்று வந்தது – வரலாற்றுப் பூர்வமான உண்மையாகும். இலங்கை – சுதந்திரம் பெற்ற பிறகு தமிழர் துறை முகங்களை சிங்களவர் மூடிவிட்டனர். இரு நாட்டுத் தமிழர்களுக்கிடையே நிலவி வந்த தொடர்புகள் திட்ட மிட்டுத் துண்டிக்கப்பட்டன. இதன் விளைவாக இரு நாடுகளையும் சேர்ந்த தமிழ் மீனவர்கள் பெரும் பாதிப் பிற்கு உள்ளானார்கள்.

இருபுறத்திலும் உள்ள தமிழ் மீனவர்களும் தங் களுக்கு இடையே எவ்வித சச்சரவுமின்றி தாராளமாக வும், சுதந்திரமாகவும் மீன்பிடித் தொழிலைச் செய்தனர். இரு தரப்புத் தமிழ் மீனவர்களும் ஒரு போதும் ஒருவ ருக்கு எதிராக மற்றவர் தமது அரசுகளிடம் புகார் செய்ததில்லை.

இராமநாதபுரம் அரசருக்குச் சொந்தமான கச்சத் தீவில் – ஆண்டுதோறும் நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் – இருநாட்டுத் தமிழர்களும் கலந்து கொண்டு மணவினைத் தொடர்புகள் வரை கொண்டு மகிழ்ந்து வந்தனர். ஒரு போதும் அவர்களுக் கிடையே எத்தகைய சச்சரவும் மூண்டது கிடையாது. தமிழருக்குச் சொந்தமான கச்சத்தீவை இலங்கை அரசுக்கு இந்திய அரசு அளித்ததாகக் கூறப்படுவது சட்டப்படி செல்லாத ஒன்றாகும்.

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் எத்தகைய புகாரும் கூறாத நிலையில் சிங்களக் கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களை வேட்டை யாடத் தொடங்கியது. குறிப்பாக 1983-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டு வரை சிங்களக் கடற்படை, விமானப்படை ஆகியவற்றால் 250-க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 150-க்கும் மேற் பட்டவர்கள் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள். தழிழ் மீனவர்களுக்குச் சொந்தமான கட்டுமரம், விசைப்படகு, வலை ஆகியவற்றுக்கான சேதம் ரூ. 12 கோடிக்கு மேலாகும். மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக் கும் போக முடியாத வகையில் ஏற்பட்ட இழப்பு கணக் கிட முடியாததாகும்.பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இந்திய அரசோ இலங்கை அரசோ இதுவரை எந்த நட்ட ஈடு எதுவும் அளிக்கவில்லை.

சிங்கள அரசு தமிழ் மீனவர்களைக் கொன்று குவிப்பதற்கு கச்சத்தீவு பிரச்சினை காரணமல்ல; மீன்பிடி உரிமை காரணமல்ல; தமிழ்ப்போராளிகள் பிரச்சினையும் காரணமல்ல; இவையெல்லாம் போலிச் சமாதானங்களாகும்.

தமிழர்கள் எங்கேயிருந்தாலும் அவர்களை அழித் தொழிக்க வேண்டும் என்றும், சிங்களப்பேரின வாதிகளின் இனவெறிக் கொள்கையே இதற்கு அடிப்படைக் காரணம் என்பதை அனைவரும உணர வேண்டும்.

செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மேலே கண்ட இரு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய அரசு தவறுமேயானால், அக்டோபர் திங்களில்  (தேதி பின்னர் அறிவிக்கப்படும்) அனைத்துக் கட்சித் தலைவர்களும் இராமேசுவரத்திலிருந்து படகுகளில் தியாகப்பயணமாகப் புறப்பட்டு – சிங்களக் கடற்படையை எதிர்கொண்டு அறிவழியில் போராட வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது. இப்போராட்டத்தில் சேர முன்வருமாறு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் மாநாடு வேண்டுகோள் விடுத்தது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *