காரைக்குடி ஜூலை 26- சுயமரியாதை சுடரொளி என்.ஆர்.சாமி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாளான நேற்று (26.7.2025) மாலை காரைக்குடி பெரியார் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட தலைவர் கு.வைகறை, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணி வண்ணன், மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, கல்லல் ஒன்றிய தலைவர் கொரட்டி வீ.பாலு, தேவகோட்டை நகர தலைவர் வீர.முருகப்பன், தேவகோட்டை நகர ப.க.அமைப்பாளர் சிவ.தில்லைராசா, தேவகோட்டை ஒன்றிய அமைப்பாளர் ஜோசப்,குறள் நெறி தொண்டர் சுப.பரமசிவம், ஏ.அய்.டி.யூ.சி. மாநிலக்குழு உறுப்பினர் பழ.இராமச்சந்திரன், சி.பி.அய்.தோழர் கண்ணன், கிராம நிருவாக அலுவலர் சங்க மாநில தலைவர் இரா.போசு, தேவகோட்டை செ.க. குமணன், சூரக்குடி மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வந்திருந்தோரை மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, தி.செயலெட்சுமி, தி.என்னாரெசு பிராட்லா, தி.புரூனோ என்னாரெசு, பு.ரம்யமலர், தி.தமிழ்ச்செல்வி, பெரியார் பிஞ்சுகள் ர.பு.சித்தார்த்தன், ர.பு.கவுதமன் ஆகியோர் வரவேற்றனர்.