அரியலூர், ஜூன் 14 – அரியலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 10.6..2023 அன்று மாலை 5 மணியளவில் அரியலூர் சிவக்கொழுந்து இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கழகத்துணைப்பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் தலைமையேற்க, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் க. சிந்தனைச் செல்வன், பொதுக் குழு உறுப்பினர் சி.காமராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன், ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலை வர் க.கார்த்திக் கடவுள்மறுப்பு கூறினார். தஞ்சை பாவலர் பொன்னரசு கொள்கைப் பாட லைப் பாடினார்.
மாவட்ட அமைப்பாளர் இரத் தின ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் இரா திலீபன், மாவட்ட துணைச்செயலாளர் கள் மா.சங்கர், பொன்.செந் தில்குமார், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் லெ. தமிழரசன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் திராவிட வித்து, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ப.மதிய ழகன்,செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன், செயலாளர் ராசா.செல்வகுமார், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஒன்றிய செயலாளர் மு.கோபாலகிருட்டி ணன், சட்டத்துறை மாணவரணி செயலாளர் எஸ் எஸ். திராவிடச் செல்வன், மாவட்ட தொழிலா ளரணி தலைவர் தா.மதியழகன், செயலாளர் வெ.இளவரசன், அமைப்பாளர் சி.கருப்புசாமி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆ.இளவழகன், ஆண்டிமடம் நகர செயலாளர் டி.எஸ்.கே. அண்ணாமலை, பெரியாக்குறிச்சி சோ.க.சேகர், பெ.கோ.கோபால்,குழுமூர் சுப்பராயன் பொய்யாத நல்லூர் வெள்ளமுத்து, விளாங்குடி இளைஞரணி தோழர்கள் க.மணிகண்டன், கி.கமலக்கண் ணன், செ.மாரிமுத்து, முகேஷ் ராஜ், செ.சூர்யா, சி.கலைவா ணன், நீ.ஜீவா, த.சஞ்சய் தி. எட்வின், வீராக்கன். பரத், இரா. அருண், தினேஷ், ஆகியோர் பங் கேற்று கருத்துகளை எடுத்துக் கூறிய பின்னர் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் இளைஞர்களிடத் தில் பெரியாரைக் கொண்டு சேர்ப்பது குறித்தும் பெரியாரி யல் பயிற்சி முகாம் சமூகக் காப் பணி பயிற்சி முகாம் சிறப்பாக நடத்தப்பட வேண்டியது குறித் தும் இயக்க கொள்கைகளை விளக்கியும் சிறப்புரையாற்றி னார்.
ஜாதி ஒழிப்பிற்காகஅரசியல் சட்டத்தை எரித்து 18 மாதங்கள் சிறை சென்ற ஜாதி ஒழிப்பு மாவீரர் தத்தனூர் சா.துரைக் கண்ணு அவர்களின் மறைவிற்கு கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித் துக் கொண்டது.
ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவின் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை சிறப்பாக செயல்படுத்துவது, தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், பள்ளி கல்லூரிகளில் வாயிற்கூட்டங் கள் நடத்தி ஏராளமான இளை ஞர்களை இயக்கத்தில் சேர்ப்பது, கிளைக்கழகம்தோறும் கழக இலட்சியக்கொடியை ஏற்று வது, விடுதலை நாளேட்டை வாங்கி பரப்புவது, செந்துறையில் எதிர்வரும் 24.6.62023 அன்று நடைபெறவிருக்கும் பெரியாரியல் பயிற்சி முகாமில் ஏராளமான இளைஞர்களையும் மாணவர்களையும் பங்கேற்க செய்து சிறப்பாக நடத்துவது, குற்றாலம் பயிற்சி முகாமிற்கு குறைந்தபட்சம் 5 பேரை பங்கேற்க செய்வது மற்றும் சமூக காப்பணியில் முன்பே பயிற்சி பெற்றவர்களுடன் புதிய இளை ஞர்களை இணைத்து மீண்டும் சமூக காப்பணி பயிற்சியை அரி யலூர் மாவட்டத்தில் நடத்திடுவ தெனவும், களப்பணி பயிற்சியாக திராவிடர் கழக வெளியீடு களை இளைஞரணியினர் பரப் புவதெ னவும் முடிவு செய்யப்பட்டது.