ஓய்வு ஊதியர்களுக்கு புதிய நேர்காணல் முறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரசியல்

சென்னை, ஜூன் 14 தமிழ்நாடு சட்டப் பேரவையில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியன்று நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஓய்வூதியர் நேர்காணல் என்பது ஓய்வூதியரின் உயிர் வாழ்வை ஒவ்வொரு ஆண் டும் கருவூல கணக்குத் துறையில் உறுதி செய்வது அடிப்படை பணியாகும். தற்போது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் செப் டம்பர் வரை நேர்காணல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓய்வூதி யர்கள் எளிதில் இந்த சேவையை பெறும் வகையில் ஆண்டு முழு வதும் ஓய்வூதியர் நேர்காணல் மேற்கொள்ள வழி வகை செய் யப்படும் என்று கூறியிருந்தார். 

இந்த அறிவிப்பையடுத்து, ஓய்வூதியரின் உயிர் வாழ்வை உறுதி செய்யும் நேர் காணலை செயல்படுத்துவதற்கான முறையை அரசுக்கு கருவூல கணக் குத் துறை ஆணையர் அனுப்பி இருந்தார். அவரது கருத்துருவை ஏற்று அரசு உத்தரவிடுகிறது. அதன்படி, வரும் ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து இந்த புதிய முறை அமலுக்கு வரும். ஓய்வூதியர் ஓய்வு பெற்ற மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் நேர்காணல் நடை பெறும். ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் ஆகிய இரண் டையும் பெறும் ஓய்வூதியருக்கான நேர் காணல், அவர் பணி ஓய்வு பெற்ற மாதத்தில் நடைபெறும். குடும்ப ஓய்வூதியம், சிறப்பு ஓய்வூதியம் பெறுவோருக்கான நேர்காணல், அவர்களுக்கு எந்த மாதத்தில் ஓய்வூதியம் வழங்குவது தொடங்கப்பட்டதோ, அந்த மாதத்தில் நேர்காணல் நடத்தப் படும். 

ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர், சிறப்பு ஓய்வூதியர் ஆகியோர் நேர் காணலுக்கு வரத் தவறினால், கருணையாக தரப்பட்டுள்ள மாதத்திற்கு அடுத்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும். எடுத்துக்காட்டாக ஜூலை மாதம் ஓய்வு பெற்ற ஓய்வூதியருக்கு ஜூலை 1 முதல் 31-ஆம் தேதிவரை நேர்காணலுக்கு செல்ல வாய்ப் பளிக்கப்படுகிறது. அந்த மாதம் நேர்காணலுக்கு செல்லத் தவறி னால் மறுமாதம் ஆகஸ்டு 1 முதல் 31-ஆம் தேதிவரை கருணையாக ஒரு மாதம் வாய்ப்பு தரப்படும். அதிலும் நேர்காணலுக்குச் செல் லாவிட்டால் செப்டம்பர் மாதத் தில் இருந்து ஓய்வூதியம் நிறுத் தப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *