வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீதான வழக்கைத் திரும்ப பெறவேண்டும்
மேனாள் நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் கருத்து
இது தனிப்பட்ட வாஞ்சிநாதன் பிரச்சினையல்ல. தன்மீதான புகாரை நீதிபதி சுவாமிநாதனே விசாரிக்க கூடாது. நீதிபதி சுவாமிநாதன் மீது வழக்குரைஞர் வாஞ்சிநாதன் சுமத்தியுள்ள 14 குற்றச்சாட்டையும் நாங்களும் முன்வைத்துள்ளோம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய கடிதத்தை கசிய விட்டது யார்? இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட வேண்டும். வாஞ்சிநாதன் மீதான அவமதிப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 10 பேர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக உள்ளோம். இது தனிப்பட்ட வாஞ்சிநாதன் பிரச்சினையல்ல. வாஞ்சிநாதனே இந்த வழக்கை கைவிட்டாலும் நாங்கள் கைவிடமாட்டோம். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. 99 சதவிகித வழக்குரைஞர்கள் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக உள்ளனர்.
– உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரி.பரந்தாமன்
– – – – –
மக்கள் நலப் போராட்டங் களுக்காக அறியப்பட்டவர் வாஞ்சிநாதன். 14.6.2025 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களின் தீர்ப்புகளில் ஒரு சார்பு நிலை தெரிகிறது என்பதற்கு பல்வேறு வழக்குகளைச் சான்று காட்டி கடிதம் எழுதியிருக்கிறார். இதை நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இங்கிலாந்து போன்ற நாடுகளிலேயே இன்று நீதிமன்ற அவமதிப்பு என்பது இல்லாமல் ஆகிவிட்டது. நியாயமான விமர்சனங்களை ஏற்கவேண்டும் என்னும் போக்கு இன்று வளர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி சந்திரசூட் மீது கூட இத்தகைய விமர்சனங்களை மற்றொரு நீதிபதி தவே முன் வைக்கிறார். இவையெல்லாம் மக்களின் பார்வையில் முன் வைக்கப்படும் நியாயமான விமர்சனங்கள். வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நோட்டிஸ் அளித்து விசாரிப்பதற்கு பதிலாக சட்ட முறைப்படி மாண்பமை நீதிபதி அவர்கள் அணுக வேண்டும். அதை வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களும் சட்டப்படி எதிர்கொள்வார். நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்ளை ரத்து செய்க
– மூத்த வழக்குரைஞர்
ப.பா.மோகன்
– – – – –
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இதனைப் பெரிது படுத்தி இருக்க வேண்டாம். நீதிமன் றத்தின் மீதான நம்பிக்கை போய்விட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் எல்லாம் காப்பாற்றாது. ஒரு வழக்கு நேர்மையாக நடத்தப்படுகிறதா என்பதை தான் அது பார்க்கும். சட்ட அமைச்சர் சிவசங்கர் வழக்கிலேயே நீதிமன்ற அவமதிப்பை எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். அந்த வழக்கின் தீர்ப்பை படிக்கவேண்டும்.
– மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத்.
– – – – –
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் கருத்துரிமைக்கு எதிரானது. நீதிமன்றங்களின் தீர்ப்பை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் உண்டு. – மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு.
திருப்பரங்குன்றம் வழக்கில் வெளிவராத ஒரு பிரச்சனையை வெளிக் கொண்டு வந்தது வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தான். இது தவிர அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பிரச்சனை, சிதம்பரம் கோயில் வழக்கு என முக்கிய பிரச்சினைகளில் பங்காற்றியுள்ளார். வாஞ்சிநாதனுடைய செயல்பாடுகளை இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினால் நிறுத்த முடியாது.
– மூத்த வழக்குரைஞர் ராஜேந்திரன்