மாணவிகளில் கைகளில்
திரிசூலமும் வாளும் கொடுத்த ஹிந்து மகாசபை தலைவி
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா ஹிந்து மகாசபை தலைவர் மீரா ராத்தோட் மீது நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சில தொழிலதிபர்களை மிரட்டியது தொடர்பாக கைதுசெய்யப்பட்டார். ஏற்கெனவே தாஜ்மகால் மீது பசுமாட்டு மூத்திரம், கங்கை, யமுனை, உள்ளிட்ட நதிகளின் நீரை தெளித்து அங்கே பூஜை செய்த குற்றச்சாட்டின் கீழ் இவர் மீது தேசிய அகழாய்வு அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைதாகி வெளியேவந்த மீரா ராத்தோர், வழியில் பள்ளிக்குச் சென்றுகொண்டு இருந்த சிறுமிகளை நிறுத்தி அவர்கள் கையில் வாள், திரிசூலம், கொடுத்து புத்தகங்களில் குங்குமத்தை அப்பிவிட்டார். மேலும் மாணவிகளுக்கு மாணவிகளுக்கு காவி துப்பட்டாக்களை அணிவித்து, சந்தன திலகம் இட்டு, கைகளில் காவிக்கயிறு கட்டி மாணவிகளை 40 முறை “ஜெய் சிறீராம் ஹர் ஹர் மகாதேவ்” என்று கூறவைத்துள்ளார். மேலும் அன்றாடம் திரிசூலம் மற்றும் வாளை பள்ளிக்கு கொண்டுவரவேண்டும் என்றும் வேற்று மதத்தினர் நமது ஹிந்து பிள்ளைகளுடன் பேச முயன்றால் இந்த வாளும் திரிசூலத்தைக் கொண்டு அவர்களுக்கு பாடம் புகட்டவேண்டும் என்றார்.
அவர் பிணை கையெப்பமிட்டு வெளியேவந்த காவல் நிலையத்திற்கு அருகிலேயே இதைச் செய்கிறார். காவலர்களும் இவரின் இந்த சட்டவிரோத செயலை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தனர்.