நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பீகார் சட்டப்பேரவை வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்ற பெயரில் பாஜகவிற்கு வாக்கு வங்கி இல்லாத பகுதிகளில் பெருமளவில் வாக்காளர்களை நீக்கும் அராஜகப் போக்கை கண்டித்து நாடாளுமன்றத்தில் ‘இந்தியா கூட்டணி’ சார்பில் போராட்டம் நடந்துவருகிறது இந்தப் போராட்டத்தில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, சமாஜ்வாடி கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் வைகோ மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள உறுப்பினர்கள், மனோஜ் குமார் ஜா உட்பட அனைவருமே கருப்பு உடை அணிந்து ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பீகார் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தைக் கண்டித்து முழக்கமிட்டனர்.