சென்னை, ஜூன் 14 – தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்து வர்கள் பரிந்துரைத்துள்ள னர்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் இன்று அதிகாலை கைது செய் யப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படு கிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவரை ஓமந்தூரார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதித்த னர்.
இதையடுத்து செந் தில் பாலாஜியை காண ஒமந்தூரர் மருத்துவ மனையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் வருகை தந்தனர். அவரைத் தொடர்ந்து மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் முகாமிட்டனர்.
இதை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறினார். இந் நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ கிராம் பரிசோதனை நடைபெற்றது; இதனால், செந்தில் பாலாஜியை 2 மணி நேரத்துக்கு யாரும் பார்க்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள் ளது. இசிஜியில் மாறு பாடு இருந்ததால் ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா என பரி சோதிக் கப்பட்டது.இந்த பரிசோதனையில் செந் தில் பாலாஜிக்கு ரத்த நாளத்தில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதனால் அமைச் சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.