கரோனா பாதிப்பு சரிவடைந்தது ஒன்றிய அரசு தகவல்

புதுடில்லி, ஜூலை 25- கரோனா பாதிப்பு சரிவடைந்துவிட்டதாக ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் 22.7.2025 அன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்த அறிக்கையில் இதுகுறித்து கூறி இருப்பதாவது:-

உலக சுகாதார நிறுவனம், கிழக்கு மத்திய தரைகடல் நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பரவல் வேகமெடுத்து உள்ளதாக மே 28ஆம் தேதி அறிவித்தது. மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க பரிந்துரைக்கப்பட்டன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய வகை வைரஸ் உருமாற்றத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா மே மாதம் வேகமெடுத்து ஜூன் 13ஆம் தேதி உச்சம் தொட்டிருந்தது. அதன்பிறகு சரிவடைந்துவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *