தொல்.திருமாவளவன் பேட்டி
மீனம்பாக்கம், ஜுலை 25- அ.தி.மு.க.வை பலவீனப் படுத்தி தமிழ்நாட்டில் 2ஆவது பெரிய காட்சியாக வர பா.ஜனதா முயற்சி செய்கிறது என திருமாவள வன் தெரிவித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர்
விடுதலை சிறுத் தைகள் கட்சி தலை வர் திருமாவளவன், சென்னையில் இருந்து டில்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குடியரசுத் துணைத் தலைவர் திடீரென பதவி விலகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது பெரும் அரசியல் சதி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவராக பதவி விலகல் செய்யவில்லை. அவரை கட்டாயப் படுத்தி கையொப்பம் பெற்று இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும்.
அ.தி.மு.க.வை பயன்படுத்தி…
விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து எடப்பாடி பழ னிசாமி பல விமர்சனங்களை வைக்கிறார். அதை வரவேற் கிறோம். ஆனால் பா.ஜனதாவின் வழிகாட்டுதலின்படி இதுபோன்ற விமர்சனங்களை வைக்கிறாரோ என்ற நினைக்கிறேன்.
நாங்கள் பா.ஜனதாவைதான் கொள்கை பகையாக கருதுகி றோம். அ.தி.மு.க.வை அல்ல. பா.ஜனதா, கூட்டணி கட் சிகளை பலவீனப்படுத்தி அவர்களின் முதுகில் சவாரி செய்து அந்தந்த மாநிலங்களில் காலுன்றி வருகிறது. அதே உக்தியை தமிழ்நாட்டில் பா.ஜனதா கையாளுகிறது. அ.தி.மு.க.வை பயன்படுத்தி வளர துடிக்கிறது.
காழ்ப்புணர்ச்சி இல்லை
தி.மு.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதைவிட சிறுத்தைகள் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி தமிழ்நாட்டில் 2ஆவது பெரிய கட்சியாக வர பா.ஜனதா முயற்சி செய்கிறது. இதைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
அ.தி.மு.க.வுடன் தோழமை உணர்வு இருக் கிறது. அ.தி.மு.க. பாழ்பட்டு சிதைந்து விடக்கூடாது என்ற பொறுப்புணர்வுடன்தான் சுட்டி காட்டுகிறோமே தவிர அ.தி.மு.க. மீதோ, எடப்பாடி பழனிசாமி மீதோ எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.
தி.மு.க. கூட்டணியில் இருப்பதால்தான் அ.தி.மு.க., பா.ஜனதாவை விமர்சிக்கிறோம் என்று கூறுகிறோம். ஆனால் தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பா.ஜனதாவின் கொள்கைகளை சிறுத்தைகள் கட்சி ஏற்காது. தொடர்ந்து விமர்சிப்போம்.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. அண்ணாமலை தலைவர் பதவியில் இல்லை என்பதை மறந்து ஏதேதோ பேசிக்கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.