சமத்துவபுரங்களின் முன்னோடி பெரியார் புரமான ‘விடுதலைபுரம்’-ர.பிரகாசு

2 Min Read

[‘‘திராவிடக் கொள்கைபுரம்!’’ என்னும் தலைப்பில்
‘முரசொலி பாசறை’ பகுதியில் வெளியான கட்டுரை]

விடுதலைபுரத்தில் 35 குடியிருப்புகளுடன் சேர்த்து, பெரியார் சிலை ஒன்றையும் நிறுவி னார் தங்கவேலன். இரண்டையும் திறந்துவைக்க கலைஞர் வர வேண்டுமென்ற தங்கவேலனின் விருப்பத்தைத் தவிடுபொடியாக்கியது நெருக்கடி நிலை காலம். அதனால், பெரியார் சிலையைத் திறக்காமலேயே மூடிவைத்துவிட்டார் தங்கவேலன். குடியிருப்புகள் மட்டும், அதிகாரி களைக் கொண்டே திறக்கப்பட்டன. அடுத்து அமைந்த எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் பெரியார் சிலை அப்படியே மூடியே இருந்தது.

கடைசியில், 1994-ஆம் ஆண்டு கே.என். நேரு முன்னிலையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலைபுரத்திற்குச் சென்று பெரியார் சிலையைத் திறந்துவைத்தார். அருகே உள்ள காணக்கிளியநல்லூர்தான் கே.என்.நேருவின் சொந்த ஊர்.

பெரியார் சிலை திறக்கப்பட்ட அடுத்த ஆண்டே, தங்கவேலன் மறைந்துவிட்டார். ஓர் ஊரையே நிறுவி, அந்த ஊர் ஜாதி- மத பேதங்களுக்கு இடமில்லாமல் சமத்துவத்துடன், இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவர் வகுத்துத் தந்த கொள்கைகளால் தங்கவேலனைத் தங்களோடு வைத்துக்கொள்ள முடிவெடுத்த கிராம மக்கள், ஊருக்கு மத்தி யில் உள்ள 4 கிராமங்களுக்கான இணைப்புச் சாலையிலேயே அவரை அடக்கம் செய்து, நினைவிடமும் எழுப்பினர். நீங்காத அவர் நினைவுகளைச் சுமந்துகொண்டே, இன்றைக் கும் அவர் வகுத்துத் தந்த கொள்கை களை இம்மியளவும் மாறாமல் கடைப்பிடிக்கிறது விடுதலை புரம் கிராமம்.

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் பிற்படுத்தப்பட் டோர் இடஒதுக்கீட்டிற்கு, பொருளாதார  அளவுகோலை திணித்தபோது, தி.மு.க., திராவிடர் கழகம் முன்னெடுத்த போராட்டங்களில் பங்கெடுத்து, விடுதலைபுரத்தைச் சேர்ந்தவர்கள் சிறைக்குச் சென்ற வரலாறும் உண்டு.

2 வீடுகள் மட்டுமே இருந்த அந்த ஒற்றையடிப் பாதை கொண்ட காடு. இப்போது சுமார் 100 வீடுகளை கொண்ட கிராமம் ஆகிவிட்டது. அதுவும் தங்கவேலன் விரும்பியதைப் போலவே அனைத்து ஜாதி-மதத்தினரும் ஒன்றாகக் கூடி வாழும் சமத்துவபுரமாக உருவாகியிருக்கிறது. இன்றும் அங்கு கோயில் கிடையாது. மசூதி கிடையாது, தேவாலயம் கிடை யாது. ஊரில் யார் வீட்டுத் திருமணம் என்றாலும், ஊரே கூடி கொண்டாடும். துக்க நிகழ்வு என்றால், பட்டாசு வெடிப்பதோ, குடிப்பதோ அறவே கிடையாது.மவுனமாக அடக்கம் செய்துவிட்டு, துயரில் ஊரே பங்கெடுக்கும். பொங்கலும், பெரியார் பிறந்தநாளும்தான் அவர்களுக்குத் திருவிழா. ஊரை நிறுவிய தங்கவேலனாரையும் அவர் நினைவுநாள், பிறந்தநாளில் நன்றியோடு நினைவுகூருகின்றனர்.

பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டு, கலைஞரால் கட்டியெழுப்பப்பட்ட ‘விடுதலை புரம்’ கிராமம், சமத்துவபுரங்களுக்கு முன்னோடி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முன் மாதிரி கிராமமாகவும் வரலாற்றைச் சுமந்துள்ளது.

நன்றி: ‘முரசொலி’  25.7.2025

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *