ஓர் ஊரை நிறுவி, சமத்துவபுரமாக அதைக் கட்டியெழுப்பிய வேளையில், எனது தந்தை தங்கவேலனார் திராவிடர் கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் கடமையாகவே கொண்டிருந்தார். பெரியார் தொடர்பாக நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். மதுரை, சேலம், கோவை என பல ஊர்களுக்கும் சென்று இயக்க மேடைகளில் பாடியுள்ளார். அந்தப் பணிகளுக்காகவே பெரியார் நூற்றாண்டில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் ‘பெரியாரின் பெருந்தொண்டர்’ என்ற விருதைப் பெற்றார். ‘பேச்சிசை தங்க வேலனார்’ என்றும் புகழப்பட்டார். திருச்சி பெரியார் மாளிகையின் முன்பக்க பூங்கா வுக்கும் ‘விடுதலைபுரம் தங்கவேலன் நினைவுப் பூங்கா’ என பெயர் சூட்டியது திராவிடர் கழகம்.
‘பெரியாரின் பெருந்தொண்டர்’

Leave a Comment