மகளிர் அணி மகளிர் பாசறையின் சார்பில்
தனியாக இயக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படும்
அறந்தாங்கி, ஜூலை 24- அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை சார்பாக 22.6.2025 மாலை 4.30 மணிக்கு கைகாட்டி தமிழ்நாடு தொழில்நுட்ப பயிற்சி கூடத்தில், மகளிர் அணி மாவட்டத் தலைவர் மாலதி வீரையா தலைமையில் மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கழக துணைச் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனியும், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வியும் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்களையும் தமிழர் தலைவர் மகளிர் அணி மகளிர் பாசறைக்கு அறிவித்துள்ள வேலைத் திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்து உரைத் தனர் ..
நிகழ்வில் கலந்து கொண்ட மாநில மாநில மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூர் பாண்டி யன் கருத்துரை ஆற்றினார்.
அறந்தாங்கி மாவட்ட தலைவர் க. மாரிமுத்து, உரையில் ,மகளிர் அணி மகளிர் பாசறை தோழர்கள் நிகழ்ச்சிகளை தனியாக அவர்களே நடத்த வேண்டும் என்றும் அதற்கு மாவட்ட திராவிடர் கழகம் மிகுந்த ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் உரையாற்றினார்.
புதிய பொறுப்பாளர்கள்
மகளிர் அணி
மாவட்ட தலைவர் சவு.ஞானாம்பாள், துணைத் தலைவர் மா.மலர்,
மாவட்ட செயலாளர் ம.கீதா, மாவட்ட துணைச் செயலாளர் கா.சத்யா கார்த்திக்
மகளிர் பாசறை
மாவட்ட தலைவர் ம.மாலதி, துணைத் தலைவர் சுவாதி.
மாவட்ட செயலாளர் நெ.கீதா , மாவட்டத் துணைச் செயலாளர் கனகம்பாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
தீர்மானங்கள்
கிளை, ஒன்றிய அளவில் மகளிர் பொறுப்பாளர்களை நியமிப்பது ….
மகளிர் அணி மகளிர் பாசறை தோழர்களே தனியாக இயக்க நிகழ்ச்சிகளை நடத்துவது.
தமிழர் தலைவர் அவர்களின் வேண்டுகோளின்படி இயக்கம் சார்ந்த சிறு குறு வெளியீடுகளை பொதுமக்கள் மத்தியில் விற்பனை செய்து பிரச்சார பணி மேற்கொள்வவதென முடிவு.
கூட்டத்தில், ராஜலட்சுமி பட்டுக்கோட்டை மாவட்ட மகளிர் அணி வே.அமுதா, ம.கீதா, ஈழநங்கை, யாழினி,
மலர்விழி உள்ளிட்ட மகளிர் தோழர்களும், பகுத்தறிவு, அறிவரசி, ரித்திகா, அழகேசன், ருத்திஷ் ஆகிய பெரியார் பிஞ்சுகளும் பங்கேற்றனர்.