உழைப்பின் உருவமான நமது முதலமைச்சர் அவர்கள் நாளும் நலமடைந்து வருகின்ற நல்ல செய்தி – உலகெங்கும் உள்ள கொள்கையாளர்களுக்கும் அவரது கருணையும் கடமையும் போட்டி போட்டுக் கொண்டு ஆற்றும் தொண்டின் காரணமாகப் பயன் பெறும் பொது மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
அவர் முழு சிகிச்சைப் பெற்று தனது வழக்கமான கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பி வாழ்த்தும் அனைவருடன், என்றும் அவரது நலம் விரும்பியாக உள்ள நாமும் இணைகிறோம் – விழைகிறோம்.
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
23.7.2025